சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கே நிர்வாண ராமர் சிலை?.. துக்ளக் அட்டைப்படத்தை காட்டி பத்திரிகையாளர் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன?

    சென்னை: ரஜினி குறிப்பிட்ட துக்ளக் படத்தை வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் சொன்ன ஊர்வலத்தில் போன ராமர் சிலை இதுதான். இதுல எங்க உடையில்லாம இருக்கு என பத்திரிகையாளர் ஒருவர் படத்துடன் வெளியிட்டு ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது.

    இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    விபூதி பூசியதையே தடுக்காதவர் பெரியார்.. ரஜினிகாந்த் கூறியது வரலாற்று பிழை: திருமாவளவன்விபூதி பூசியதையே தடுக்காதவர் பெரியார்.. ரஜினிகாந்த் கூறியது வரலாற்று பிழை: திருமாவளவன்

    செய்தியாளர்கள் சந்திப்பு

    செய்தியாளர்கள் சந்திப்பு

    இந்த நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் 2017-இல் வெளியான அவுட்லுக் பத்திரிகையை ஆதாரமாக காட்டி தான் பேசியதாகவும் நான் கேட்டதை வைத்து பேசியதாகவும் தெரிவித்த ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என கூறிவிட்டார்.

    ஆதாரம்

    ஆதாரம்

    இந்த நிலையில் இதுகுறித்து திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் 1971-இல் துக்ளக்கில் வெளியான விஷயத்தை ஆதாரமாக காட்டித்தான் ரஜினி பேச வேண்டுமே தவிர 2017-ஆம் ஆண்டு வெளியான அவுட்லுக்கை ஆதாரமாக வைத்து பேசக் கூடாது என்றார்.

    உடையில்லாத சிலைகள்

    உடையில்லாத சிலைகள்

    இந்த நிலையில் 1971-ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிகை அட்டை படத்தை பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்து அதை ரஜினிக்கும் ஷேர் செய்துள்ளார். அவர் கூறுகையில் இது தான் அந்த ஊர்வலத்துல கொண்டு போன ராமர் சிலை. இதுல எங்க உடையில்லாம இருக்குன்னு சொல்லுங்க என கேட்டுள்ளார்.

    ரஜினி குறிப்பிட்ட கருத்து

    மேலும் ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர் என ரஜினி கூறியதை குறிப்பிட்டு இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    A photo of Tuglaq magazine which was released on 1971 having Salem Periyar Rally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X