"ஜோக்கர்".. கட்சியில் இருந்து விலகியதும்! முதல் சீக்ரெட்டை சொன்ன காயத்ரி! மிட் நைட்டில்.. என்னாச்சு?
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் கட்சி குறித்த முக்கியமான சில விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தற்போது கட்சியில் இருந்தே விலகி இருக்கிறார். அண்ணாமலைக்கு எதிராக கடுமையாக குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு காயத்ரி கட்சியில் இருந்தே விலகி இருக்கிறார்.
இவர் பாஜகவில் இருந்து விலகும் முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.

என்ன சொன்னார்?
இந்த நிலையில் அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், காயத்ரி ரகுராம் கடந்த 2 நாட்களாகவே கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்றுதான் இருந்தார். கட்சியில் தனக்கு எதிராக தொடர்ந்து நிர்வாகிகள் போஸ்ட் செய்வதை அவர் விரும்பவில்லை. முக்கியமாக தினமும் தன்னை திமுக கைக்கூலி என்று சொல்வதை அவர் விரும்பவில்லை. இதனால் கட்சியில் இருந்தே விலகி விடலாம் என்று முடிவு செய்துள்ளார். அவரின் அயலக தமிழர் நலப்பிரிவில் இருந்த உறுப்பினர்கள் எல்லோரையும் மாற்றிவிட்டனர். புதிய தலைவரையும் போட்டுவிட்டனர்.

சூர்யா
ஆனால் சூர்யா இருந்த ஓபிசி நலப்பிரிவிற்கு இன்னும் புதிய தலைவரை நியமிக்கவில்லை. இதனால் தான் மீண்டும் வர கூடாது என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார் என்பதை காயத்ரி புரிந்து கொண்டார். இதன் காரணமாகவே காயத்ரி கோபம் அடைந்து.. மானமே முக்கியம் என்று இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவே இந்த அறிவிப்பை காயத்ரி வெளியிடுவதாக இருந்துள்ளது. ஆனால் அதற்கு முன் சில பாஜக நிர்வாகிகளிடம் பேசி உள்ளார். சில மூத்த நிர்வாகிகளுக்கு போன் செய்து தனது முடிவை அறிவித்துள்ளார்.

வேண்டாம்
சிலர் வேண்டாம் என்றும் பல்லை கடித்துக்கொண்டு இருக்கும்படியும் கூறியதாக தெரிகிறது. ஆனால் சிலர் அண்ணாமலைக்கு நிறைய சப்போர்ட் உள்ளது. நீங்கள் மீண்டும் கட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு பதவி இருக்காது. பதவி இல்லாமல் இருக்க ரெடி என்றால் இருங்கள் என்று அவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்தே காயத்ரி நேற்று இரவோடு இரவாக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் கட்சியில் இருந்து விலகுவதாக போஸ்ட் செய்துள்ளார். அதற்கு முன்னும், பின்னும் பல ரகசியங்களை வெளியிடும் விதமாக காயத்ரி சில போஸ்ட்களை செய்துள்ளார். அதில் அண்ணாமலையின் ஐடி வார் ரூம் பெங்களூரில் இருந்து செயல்படுவதாக கூறியுள்ளார்.

வார் ரூம்
அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் காயத்ரி இதை போஸ்ட் செய்துள்ளார். அதில், ஜோக்கரின் வார் ரூம் பெங்களூரில் இருந்து இயங்குகிறது. தமிழ்நாடு பாஜக இளைஞரணி, அமெரிக்கா, கோவை ஆகிய இடங்களிலும் இயங்குகிறது. இவர்கள் எல்லாம் சொந்த கட்சி பெண்களை கிண்டல் செய்ய மட்டுமே லாயக்கு. ஜோக்கருக்கு இந்த சீப்பான திரில்லில் ஆர்வம் உள்ளது. நான் உண்மையை சொல்வேன். உங்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜோக்கரை பாராட்டி பில்ட் அப் கொடுப்பதற்காக அதிக பணத்தை செலவு செய்கிறார்கள். இந்த வார் ரூம்தான் அவரை காக்கிறது. எல்லாம் வேஸ்ட். இந்த ஜோக்கர் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவதுதான் இந்த வருடத்தின் ஆகப்பெரிய நகைச்சுவை, என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications