ஆதார் அட்டை வெச்சிருக்கீங்களா? வங்கி கணக்கு? உடனே நோட் பண்ணுங்க.. சென்னை ஐஸ் அவுஸ்ல பார்த்தீங்களா?
சென்னை: யார் அந்த சுபத்ரா தேவி என்று தெரியவில்லை.. இந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டல் சாலையை சேர்ந்தவர் நிர்மலா.. 35 வயதாகிறது.. இவர் ஐஸ் அவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில் உள்ளதாவது:

என்னுடைய வீட்டின் அருகே சுபத்ரா தேவி என்பவர் உள்ளார். இவரது வீட்டில் பாலாஜி(41), என்பவர் ரூ.3 ஆயிரம் சம்பளத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். சென்ற 2022ம் ஆண்டு கஷ்டங்களை நீக்குவதாக தன்னிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றார்.
ஆவணங்கள்: அந்த ஆவணங்களை வைத்து தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி, அதில் என்னுடைய பெயரில் ரூ.5 லட்சத்திற்கு லோன் பெற்று ஏமாற்றிவிட்டார். லோன் கட்டவில்லை என்று வங்கியில் அதிகாரிகள் தன்னிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்" என புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், பாலாஜி மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் நிர்மலாவிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விசாரணை மேலும் தீவிரப்படுத்தி பார்த்தபோதுதான், இவர்கள் 2 பேருமே, திருவல்லிக்கேணி பகுதியில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆபத்து: யாராவது ஆபத்தில் இருப்பதாக அல்லது பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிந்தால், அவர்களின் தர்மசங்கட சூழலை பயன்படுத்திக் கொண்டு, இவர்களாகவே வலிய சென்று உதவி செய்வதாக சொல்லி உள்ளனர். துன்பத்தில் இருப்பவர்களிடம் நைசாக பேசி, அவர்களின் ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்ட் போன்ற முக்கிய ஆவணங்களை பெற்றுள்ளனர்... இவைகளை வைத்து, வங்கிகளில் ரூ.45 லட்சம் வரை லோன் பெற்றிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வங்கிகளை அணுகும்போதுதான், இந்த மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, போலீசார், மோசடியில் ஈடுபட்ட பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர்.
யார் இவர்: ஆனால், சுபத்ரா தேவியை காணவில்லை.. இவர்தான் இந்த வழக்கில் மிக முக்கியமான குற்றவாளி என்கிறார்கள்.. இப்படி ஒரு கிரிமினல்தனத்துக்கு ஸ்கெட்ச் போட்டு தந்ததும், பணக்கஷ்டத்தில் உள்ள பெண்களிடம் நெருங்கி பேசி மோசடி செய்ததும் இவர்தானாம்.. எனவே, சுபத்ரா தேவியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
போலீசார் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்ததுமே, பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தர துவங்கியிருக்கிறார்கள்.. இதுவரை கிட்டத்தட்ட 13க்கும் மேற்பட்டோர் ஐஸ்அவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்களாம்.
உஷார்: ஒரு பகுதியில் மட்டும் இத்தனை பாதிக்கப்பட்டவர்கள் என்றால், சுபத்ரா தேவியால் ஏமாந்தவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என்பதால், போலீசாரின் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆதார் கார்டு, வங்கி கணக்கு போன்ற சுயவிவரங்களை யாரிடமும் பகிர கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications