வில்லிவாக்கத்தில் பக்கா பிளான்.. 6 மாசத்துக்கு முன்னாடியே ஸ்கெட்ச் போட்ட ஆதவ் அர்ஜுனா!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இந்த தொகுதியில் தவெகவுக்கான வெற்றி வாய்ப்பு என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிப்படையில் வில்லிவாக்கம் தொகுதி சாமானிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இப்படியான தொகுதியில் மிகப்பெரும் பணக்காரரான ஆதவ் களமிறங்கியிருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வில்லிவாகத்தின் தேர்தல் வரலாறு
கடந்த 25 ஆண்டுகளில் நடந்த 5 தேர்தல்களில், திமுக 4 முறை வெற்றி பெற்று இத்தொகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 3 தேர்தல்களில், (2011, 2016, 2021) திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவியுள்ளது. 2011-ல் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு திமுக தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக கடந்த 2 தேர்தல்களில் வெற்றி பெற்றதால், கள அளவில் கட்சி கட்டமைப்பு பலமாக இருக்கிறது.
ஆதவ் கணக்கு என்ன?
வில்லிவாக்கத்தை பொறுத்தவரை அதிக அளவில் தொழிலாளர்கள் இருக்கும் பகுதி என்பதால், விஜய்க்கு ஆதரவு தளம் பெரியதாக இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஆதவ் திட்டமிட்டிருக்கிறார். சென்னையில் விஜய் ரசிகர் மன்றம் பலமாக செயல்படும் பகுதிகளில் வில்லிவாக்கமும் ஒன்று.
விஜய் ரசிகர் மன்றம்
வில்லிவாக்கத்தின் சிட்கோ நகர், அகத்தியர் நகர், திருநகர் என லோக்கல் ஏரியாக்கள் முழுவதும் விஜய் ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாத்திற்கு ஒரு நாள் இலவச பால், முட்டை தருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். வில்லிவாக்கத்தின் பிரதான பிரச்சனையே, மழைக்காலங்களில் நீர் தேங்குவதுதான். குறிப்பாக வள்ளியம்மை நகர், அம்மன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு மழைக்காலத்தில் இந்த பிரச்சனை நீடிக்கிறது.
நிவாரண பணிகள்
மழைநீர் தேங்கும் பகுதிகளில் விஜய் ரசிகர்கள் நிவாரண உதவி செய்திருக்கிறார்கள். உதவி பெரும்பாலான மக்களுக்கு சென்று சேர்வதில்லை என்றாலும், இந்த பணியை சோஷியல் மீடியாக்களில் செய்தியாக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். இது வில்லிவாக்கம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது கவனத்தையும், ஆளும் கட்சி மீது அதிருப்தியையும் உருவாக காரணமாக இருந்தது.
விஜய் ரசிகர்களின் செயல்
அதேபோல வில்லிவாக்கத்தின் பிரதான பகுதியான சிட்கோநகரில், குடிநீர் பிரச்சனை எப்போதுமே இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் தலையீடு செய்து தீர்வு காண விஜய் ரசிகர்கள் எந்த முயற்சியையும் எடுப்பது கிடையாது. இருப்பினும் இந்த பிரச்சனை ஆட்சியாள்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியிருக்கிறது. இதையெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துதான் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் களமிறங்கியிருக்கிறார்.
பக்கா ஸ்கெட்ச் ஆதவ்
இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தவெகவில் இணைந்தார். இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால், ஆதவ் டீம், பக்கவாக ஸ்கெட்ச் போட்டு வில்லிவாக்கத்தில் வேலை பார்த்து வருவதால், அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இப்படியாக தேர்தல் அறிவிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்னரே ஆதவ் வில்லிவாக்கத்தை டார்கெட் செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
-
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications