ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக புகார்! ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாருக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மணியாட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கன்குளம் கிராமத்தில் வசித்து வரும் லூர்துசாமி என்பவரின் மனைவி, ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக தெரிவித்த புகாருக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு தெரிவித்து கீழ்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளது.

Aavin categorically denied the complaint that there were worms in the milk packet

ஆவின் நிறுவனம் பொது மக்களின் தேவைக்கேற்ப பால் மற்றும் பால் உபபொருட்களை அன்றாடம் விற்பனை செய்து வருகிறது.

21.02.2024 மற்றும் 22.02.2024 அன்று ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் கோவில்பட்டி பகுதி மணியாச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்கன்குளம் கிராமத்தில் ஆவின் டிலைட் பால் பாக்கெட் வாங்கிய நுகர்வோர் ஒருவர் ஆவின் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் (பால்பதம்) அவர்களும் புகார் அளித்த கிராமத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்தவரை நேரில் சந்தித்து விசாரித்ததில் அவரிடம் புகார் அளித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என கண்டறியப்பட்டது. மேலும், அவரிடம் இருந்த பால் பாக்கெட்டைப் பெற்று அவர் முன்னிலையில் ஆய்வு செய்த பொழுது அதில் எந்த ஒரு குறையும் இல்லை என்பதையும், பாலின் தரமும் நன்றாக இருந்தது அறியப்பட்டது.

அந்தப் பாலை விநியோகம் செய்த மொத்த விற்பனையாளரிடம் விசாரனை மேற்கொண்ட போது வேறு எந்த வாடிக்கையாளரிடமிருந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனத் தெரியவந்தது. எனவே ஆவின் பால் பாக்கெட் சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகாருக்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதையும் மற்றும் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகும் என்பதால் உடனுக்குடன் இது குறித்து கவனத்தில் கொண்டு ஆராய்ந்து இந்த விளக்கத்தை அளித்துள்ளது ஆவின் நிர்வாகம். ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் தயாரிப்புகள் மீது இது போன்ற புகார்கள் அவ்வப்போது எழுவது குறிப்பிடத்தக்கதாகும். இதனிடையே தரத்தில் சமரசமின்றி செயல்படுகிறோம் என்பது ஆவின் நிர்வாகத் தரப்பின் விளக்கமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+