10 ரூபாய்க்கு ஆவின் டிலைட் பால்.. இன்று முதல் ஊதா நிற 200 மி.லி பாக்கெட் விற்பனை!
சென்னை: ஆவின் டிலைட் பால், பாக்கெட் 10 ரூபாய்க்கு, இன்று முதல் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும். 200 மி.லி ஊதா நிற பாக்கெட் ரூ.10க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் அதிக கொழுப்பு, நடுத்தர கொழுப்பு, குறைந்த கொழுப்பு என்ற 3 வகைகளில் மக்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவின் நிறுவனம் சார்பில் பச்சை நிற பாக்கெட் பால் 4.5 சதவீத கொழுப்புச் சத்துடன் விற்பனையானது.

இந்நிலையில் இந்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவும், அதற்கு பதிலாக 1 சதவீத கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இடையே எக்ஸ் வலைதளத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. ஆவின் பாலில் கொழுப்பு குறைவாக உள்ளதாக கூறி லேப் டெஸ்ட் ரிசல்ட்டை அண்ணாமலை வெளியிட, அது உண்மை இல்லை என மனோ தங்கராஜ் வாதம் செய்தார். தொடர்ந்து, ஒருவரும் சரமாரியாக விமர்சித்துக் கொண்டனர்.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்திவிட்டு 3.5 சதவீதம் கொழுப்பு சத்துக் கொண்ட டிலைட் ஊதா நிறப் பால் பாக்கெட்டை விநியோகிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தப் போவதில்லை என்றும் ஆவின் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்கப் போவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்தது.
இந்த சூழலில் ஆவின் ஊதா நிறப் பால் பாக்கெட் இன்று முதல் மாதாந்திர அட்டை மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், பச்சை நிற பால் பாக்கெட் வழக்கம் போல விற்பனை செய்யப்படும். ஆவின் அட்டை மூலம் டிலைட் பால் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான மாதாந்திர அட்டை பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது.
இந்நிலையில் சென்னையில் 200 மில்லி லிட்டர் பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் இன்று முதல் விற்பனை செய்கிறது. இதில் கொழுப்பு சத்து அளவு 3.5% ஆக உள்ளது. சோதனை முயற்சியாக ரூ.10க்கு பால் பாக்கெட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஆவின். இந்த பால் பாக்கெட்டுகள் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று முதல் விற்பனையாகிறது.
மேலும், தற்போது ஆவின் 500 மில்லி லிட்டர் டிலைட் பால் ரூ. 21 விலையில் மாதாந்திர பால் அட்டைகள் மூளம் இன்று முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஊதா நிற 'டிலைட்' பால் அனைத்து வயதினரும் பருகும் வகையில் விட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்டு, 3.5% கொழுப்புடன் வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications