TVK: விபத்துடன் தொடங்கிய விஜய் பயணம்.. வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் வந்த ரசிகர்கள் படுகாயம்!
மதுரை: மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் தவெக தலைவர் விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்த ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கினர். மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் இதுவரை பரப்புரையை நிறைவு செய்த நிலையில், இன்று சிவகங்கை மாவட்டத்தின் கரைக்குடி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி காவல்துறையில் தவெக தரப்பு கடிதம் வழங்கி இருந்த நிலையில், 37 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கினர். இந்த பிரச்சாரம் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு, தேவர் சிலை அருகிலுள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடைபெறுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தவெக நிர்வாகிகள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து அமைதியான முறையில் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரப்புரையில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் தவெக தலைவர் விஜய் மதுரை புறப்பட்டார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பரப்புரை நடைபெறும் காரைக்குடிக்குச் சென்றார். இந்நிலையில் தான் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த இருவர் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது விஜய் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் சென்றபோது இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இளைஞர்கள் சென்ற பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், பக்கவாட்டில் ரசிகர்கள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இது கட்சிக்கும், விஜய்க்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தன்னை பின்தொடர வேண்டாம் எனக் கெஞ்சியும் இன்றும் அவரைப் பின்தொடர்ந்து சென்று விபத்துகளில் சிக்கி உள்ளனர்.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்!












Click it and Unblock the Notifications