Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டி "மோட்டல்" அனுபவம் இருக்குதா.. நடவடிக்கை உறுதி என்கிறார் ராஜகண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகித்தால் மோட்டலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசுப் பேருந்துகள் டெண்டர் விடப்பட்டுள்ள மோட்டல்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், அதேசமயம் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் வந்தால் நடவடிக்கை பாயும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகம் செய்தால் பொதுமக்கள் தயங்காமல் புகார் தரவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 நெடுஞ்சாலை உணவகங்கள்

நெடுஞ்சாலை உணவகங்கள்

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நீண்ட தூரம் செல்வோருக்கும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மற்ற வாகனங்களில் செல்வோரும் பசியாறவும், இயற்கை உபாதை கழிப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது ஓட்டல்கள். மன்னிக்கவும் மோட்டல்கள் என்று உச்சரிக்கவும். பொதுவாக நகரத்திற்குள் இருக்கும் உணவகங்களை ஆங்கிலத்தில் ஓட்டல் என்கிறோம். அதுபோல நெடுஞ்சாலைகளில் இருக்கும் உணவகங்களை மோட்டல்கள் என்று அழைப்பார்கள். சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலைகள் ஒற்றையடி பாதை போல இருக்கும் எனவே சென்னையில் இருந்து மதுராந்தகம் செல்வதற்கே 3 மணிநேரம் ஆகிவிடும். பேருந்து பயணிகளும் அசதி ஆகிவிடுவார்கள். எனவே மதுராந்தகத்தில் உள்ள உணவகத்தில் சென்னையில் இருந்து புறப்படும் வந்து சேரும் அனைத்து பேருந்துகளும் அந்த உணவகத்தில் தான் நிற்கும். பயணிகளும் எந்தவித சிரமம் இன்றி குறைந்த கட்டணத்தில் பசியாறிச் செல்வர். பயணிகளின் நலன் கருதியும் அப்போதைய உணவகங்கள் தரமான உணவை குறைந்த விலையில் கொடுத்து வந்தன. மதுராந்தகத்தில் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்ட தமிழக அரசு செங்கல்பட்டு மதுராந்தகம் இடையே ஒரு உணவகத்தை கட்டி அங்கே அனைத்து பேருந்துகளும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நாளடைவில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திறகு பின்னர் தற்போது வாகனங்கள் வேகம் அதிகரித்து விடவே 3 மணிநேரத்தில் பேருந்துகள் விழுப்புரத்தை தாண்டி விடுகின்றன. எனவே தற்போது வெளியூர் செல்லும் வாகனங்கள் விக்கிரவாண்டி உணவகத்தில் நிறுவத்துவது வழக்கமாக உள்ளது.

 விக்கிரவாண்டி உணவகம் மீது புகார்

விக்கிரவாண்டி உணவகம் மீது புகார்

தற்போது விக்கிரவாண்டி உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை என்றும், நியாயமான விலையில் உணவு விற்பதில்லை என்றும், கழிவறைகள் சுகாதாரமாக இல்லை என்றும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பொதுவாகவே நெடுஞ்சாலையோர உணவகங்களில், தோசை 60 ரூபாய், தேநீர் 20 ரூபாய், திண்பண்டங்கள் 15 ரூபாய் என கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சில அரசுப் பேருந்துகள் அரசு உத்தரவை மீறி ஒரு குறிப்பிட்ட மோட்டலில் நிறுத்தப்படுவதாகவும் இதனால் பேருந்து பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாகவும் மேலும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதுமட்டுமின்றி பேருந்து பயணக் கட்டணத்தை விட உணவுக் கட்டணம் அதிகம் என்பதும்
இயற்கை உபாதை கழிக்க, இந்த மோட்டல்களை பயன்படுத்தும் பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி உணவகம் தொடர்பான புகார்கள் அடுக்கடுக்கா அனைத்து தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் தீயாய் பரவ இந்த பிரச்சனை அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து அந்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து பதில் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் நெடுஞ்சாலை உணவகங்களில் வழங்கப்படும் உணவு தரமில்லை என புகார்கள் வந்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். மேலும் ஓட்டுநர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மோட்டல்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தக்கூடாது. டெண்டர் விடப்பட்டு அரசாங்கத்திற்கு பணம் செலுத்தும் மோட்டல்களில் மட்டுமே நிறுத்தவேண்டும் என தெரிவித்தார். மேலும் மோட்டல்களில் உணவின் தரம், அளவு, கடந்த ஆட்சியை விட விலை குறைவாக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நெடுஞ்சாலை உணவகங்களில் அவ்வப்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒருவேளை உணவு தரம் இல்லை யென்றால் அந்த ஓட்டலுக்கு நோட்டீஸ் கொடுத்துவிடுவார்கள் என ராஜகண்ணப்பன் தெரிவித்தார். பேருந்துகளை எந்தெந்த மோட்டல்களில் நிறுத்தவேண்டும் என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். டெண்டர் எடுத்து விட்டோம் என்பதற்காக மோட்டல்கள் மோசமான உணவு அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

 டெண்டர் ரத்தாகும் என எச்சரிக்கை

டெண்டர் ரத்தாகும் என எச்சரிக்கை

உணவகங்களில் தரம் குறைவாக இருந்தால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு புதியவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். எனவே பொதுமக்கள் தயங்காமல் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது புகார் அளிக்கலாம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். மேலும் விக்கிரவாண்டி உணவகம் மீது வந்த புகாரின் அடிப்படையில் அந்த மோட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ராஜகண்ணப்பன் இதுவரை புகார்கள் வந்த 6 மோட்டல்கள் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார். சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், நகரப்பேருந்தகளில் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதாக தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+