Ajithkumar: புதிய ரேஸ் காரை வாங்கிய அஜித்குமார்! என்ன விலை தெரியுமா? சென்னா காரின் ஸ்பெஷாலிட்டி என்ன
சென்னை: நடிகர் அஜித் தனது கனவு காரை வாங்கியுள்ளார். அதன் விலை என்ன என்பதை தெரிந்து கொள்லலாம். அத்துடன் அந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்க்கலாம். அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதும் அவர் ரேஸ்களில் கலந்து கொள்வதும் தெரிந்த விஷயம்தான்.
நடிகர் அஜித் அண்மையில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித் அணி 3ஆவது இடத்தை பிடித்தது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். அது போல் ஜனவரி மாதம் நடந்த கார் ரேஸிலும் 3ஆவது இடத்தை பிடித்தார்.

இந்த பந்தயங்களுக்கு பயிற்சி எடுத்துக் கொண்ட போது இரு முறை கார் விபத்தில் அஜித் சிக்கி, சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தார். பைக் ரேஸ், கார் ரேஸ் என ஆர்வம் கொண்ட அஜித், முன்பை காட்டிலும் தற்போது அதிக போட்டிகளில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் அவர் புதிதாக ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். அது குறித்து புகைப்படங்களையும் வீடியோவையும் சமூகவலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். ஹைப்பர் கார்களிலேயே மிகவும் அரிதாகக் கருதப்படும் மெக்லேரன் சென்னா என்ற காரையே, அஜித் வாங்கியிருக்கிறார்.
சர்வதேச அளவில் மொத்தம் 500 சென்னா கார்களையே மெக்லேரன் உருவாக்கியது. கார் மற்றும் ரேஸ் ஆர்வலர்களுக்கு இந்த காரின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. எஃப் 1 போட்டிகளில் மிக சிறப்பான காரை ஓட்டிய ஓட்டுநரான அயர்டான் சென்னா, 1994 ஆம் ஆண்டு எஃப் 1 போட்டியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரை கவுரவிக்கும் விதமாகவே அவருடைய பெயரில் இந்த மாடலை மெக்லேரன் நிறுவனம் உருவாக்கியது. அந்தக் கார்களில் ஒன்றைத் தான் அஜித் தற்போது வாங்கியிருக்கிறார். அந்த காரை அஜித் டெலிவரி எடுக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்த கார் மிகவும் அரிதானது என்பதால் இதை அஜித் கூடுதல் விலைக்கே வாங்கியிருப்பார் என சொல்லப்படுகிறது. அதாவது ரூ 10 முதல் ரூ 20 கோடி வரை இந்த கார் விற்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த காரில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் உள்ளது.
அதிகபட்சமாக 335 கி.மீ. வேகத்தில் செல்லும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 2.8 நொடிகளில் கடக்கும். அஜித்திடம் இந்த காருக்கு முன்பு போர்ஷ், ஃபெராரி உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications