ஜூலை 12ஆம் தேதி.. மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.. விரைவில் நல்ல செய்தி?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூலை 12ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ரஜினி
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு மயோ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் ரசிகர்களுடன் ரஜினி எடுத்த புகைப்படங்களும் ட்விட்டரில் வைரலானது.

ரசிகர்களுடன் மீட்டிங்
மருத்துவ பரிசோதனைகள் முடிந்த நிலையில், நேற்று அதிகாலை ரஜினி, அமெரிக்காவில் இருந்து சென்னைக்குத் திரும்பினார். இந்நிலையில், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூலை 12ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராகவேந்திரா திருமண மண்டபம்
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, உடல்நிலை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக்
அதைத் தொடர்ந்து அவரது நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் சேர்ந்தனர். இந்தச் சூழலில்தான், மக்கள் மன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசுகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போர்ஸ்டர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications