சீட்டாட்டம்! எப்படியெல்லாம் முட்டுக் கொடுக்குறாங்க பாருங்க.. ’நாட்டாமையை’ சீண்டுகிறாரா ராஜ்கிரண்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : "சீட்டாட்டம்" என்பது, மிக மிக மோசமான சூது.. இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.. இது எங்க போய் முடியுமோ என நடிகரும் இயக்குனமான ராஜ்கிரண் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இனிமேல் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை நடிக்க மாட்டேன் என கூறாமல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு ஆதரவாகவே சரத்குமார் பேசுவது போல தெரிகிறது என்கின்றனர் நெட்டிசன்கள்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய அவர்,"குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மி தற்கொலை என்கிறார்கள். உண்மையில் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. அதற்கு திறமை அவசியம்" எனக் கூறியிருந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமார்

சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி எனும் கட்சியின் தலைவராக இருப்பதோடு சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார். ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்திலேயே நடித்திருப்பதோடு, ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவாகப் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சமுக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இதேபோல் மனோபாலா, பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி ஆகியோருக்கும் எதிர்ப்புகள் பதிவாகி வருகிறது.

நடிகர் ராஜ்கிரண்

நடிகர் ராஜ்கிரண்

இந்நிலையில் "சீட்டாட்டம்" என்பது, மிக மிக மோசமான சூது.. இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.. இது எங்க போய் முடியுமோ என நடிகரும் இயக்குனமான ராஜ்கிரண் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," "சீட்டாட்டம்" என்பது, மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப் பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது.

எல்லாமே என் ராசா தான்

எல்லாமே என் ராசா தான்

சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள். அதற்கு அடிமையானவர்கள். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், 'எல்லாமே என் ராசா தான்" என்று, ஒரு படமே எடுத்தேன். அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. "காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே" என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில், காவல் துறையைப்பற்றிய பயமில்லாமல், எல்லோரும் ஆடலாம் என்றாகிவிட்டது.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன.. 37 குடும்பங்கள். பரிதவித்துக் கிடக்கின்றன. தமிழக அரசு, இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டைத் தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

தெரியவில்லை

தெரியவில்லை

தன்னிச்சையாக இந்தப் பிரச்சினையை கையிலெடுத்து, இந்த உயிர்பலி விளையாட்டை தடை செய்து, பொதுமக்களை காக்க வேண்டிய நீதி மன்றங்கள், இது, திறன் மேம்பாட்டு விளையாட்டு என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது, இல்லையெனில், இது அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட, மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறுவதாக, செய்திகள் வருகின்றன. இது, எதில் போய் முடியுமென்று தெரியவில்லை" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+