என் இறுதி மூச்சு வரை ஆர்த்தி எனது முன்னாள் மனைவிதான்! ரவி மோகன் திட்டவட்டம்
சென்னை: எப்போது என்னை வீட்டை விட்டு வெளியேற்றினாரோ அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன், ஆர்த்தி என் முன்னாள் மனைவிதான் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.
இது ஆர்த்தியின் அறிக்கைக்கு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. நான் சட்டப்படி ஆர்த்தி ரவிதான். என்னை யாரும் முன்னாள் மனைவி என சொல்ல வேண்டாம் என மீடியாவிடம் ஆர்த்தி கேட்டுக் கொண்டார். இதற்குத்தான் ரவி மோகன், இனி அவர் எனது முன்னாள் மனைவிதான் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவியை பிரிந்து திருமண வாழ்விலிருந்து விலகுவதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். அப்போது அவருக்கும் பாடகி கெனிஷா என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.
தோழி
ஆனால் அவர் தனது தோழி என்றும் அவர் ஹீலர் என்றும் இருவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் சென்டர் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரவி மோகன் விளக்கியிருந்தார். இதையடுத்து இந்த பேச்சுக்கள் எல்லாம் அப்படியே அடங்கியிருந்தன. ரவி மோகன் ஆர்த்தி ரவியின் விவாகரத்து வழக்கு விசாரணை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஐசரி கணேஷ் மகள் திருமணம்
இந்த நிலையில் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ரவி மோகனும் கெனிஷாவும் ஒரே நிற ஆடையில் வந்திருந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தனர். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அது போல் வரவேற்பு நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாகவே வந்தனர்.
கிசுகிசுக்கள்
இதனால் மீண்டும் கிசுகிசுக்கள் துளிர் விட்டன. இதை வைத்து ஆர்த்தி ரவி, கெனிஷா உள்ளிட்டோர் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்தனர். ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையில், நான் இன்னும் ஆர்த்தி ரவிதான் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு குஷ்பு, ராதிகா உள்ளிட்டோர் லைக் போட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று ரவி மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அழிக்க முடியாது
அதில் அவர் என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என எனக்கு தெரியும். எனது திருமண வாழ்க்கையை மீட்டெடுக்க பலமுறை போராடினேன். கடைசி வரை அது முடியாமல் போனதால் என்னால் வாழ முடியாத வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துள்ளேன் என தெரிவித்த அவர், பின்குறிப்பு என குறிப்பிட்டு, "எப்போது என் வீட்டை விட்டு நான் வெளியே வர முடிவெடுத்தேனோ அப்போதிலிருந்து என் கடைசி மூச்சு வரை ஆர்த்தி எனது எக்ஸ் மனைவிதான்" என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
ஆர்த்தியின் குடும்பம்
ரவி மோகனின் ட்வீட்டுகளை கெனிஷா இன்ஸ்டா ஸ்டோரிகளாக போட்டிருந்தார். ரவி மோகன் , ஆர்த்தியும் அவருடைய குடும்பத்தினரும்தான் தனது சம்பாதியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த குற்றச்சாட்டிற்கு ஆர்த்தியோ அல்லது அவரது தாய் விஜயலட்சுமியோ பதிலடி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications