சாகுற வயசா இது? தொடரும் மாரடைப்பு மரணங்கள் - நடிகர் சேதுராமன் முதல் இசையமைப்பாளர் ரகுராம் வரை
சென்னை: ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்துக்கு இசையமைத்த 30 வயதான தமிழ் சினிமா இசையமைப்பாளர் ரகுராம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்து இருக்கிறார். தொடர்ந்து 40 வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? விரிவாக பார்ப்போம்.
மன அழுத்தம் இருந்தால் சினிமா பாருங்கள், இசையை கேளுங்கள் என்று மனநல மருத்துவர்கள் அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். ஆனால், சினிமா நடிகர்களும், இசையமைப்பாளர்களுமே இளம் வயதில் மாரடைப்பில் பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து இதய நிபுணர்கள் கூறுகையில், "உலகம் முழுவதும் பல தசாப்தங்களாக மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. எத்தனை மருத்துவ முறைகள் வந்தாலும் இதய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே கடந்த சில ஆண்டுகளாக இதய பிரச்சினைகள் அதிகரித்து வருவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம்
நீண்ட காலமாக மனித சமுதாயத்தில் இதய நோய் பிரச்சனை அழிவை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் கடுமையான மன அழுத்தத்தை சந்திக்கும்போதும் இதயம் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஏற்கனவே இதயத்தில் இருக்கும் அடைப்புகளுக்கு அருகில் கட்டிகள் உருவாகும். இது இரத்த உறைவு மற்றும் மாரடைப்புக்கு ஏற்பட காரணமாக மாறிவிடும்.

ஆய்வுகள்
மன அழுத்தம் மற்றும் பதட்டத்துக்கும் இதய நோய்களுக்கும் அதிக தொடர்புகள் உள்ளன. நீண்ட கால மன அழுத்தத்திலிருந்து அதிக கார்டிசோல் அளவுகள் ஒரு நபரை உயர் இரத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவு முறை
உணவு என்ற பெயரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சிலர் உண்கிறார்கள். இதன் காரணமாக இதய பாதிப்பு ஏற்படுகிறது. இது அரித்மியாவுக்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் தனது 20 வயதில் இருக்கும்போது, கொலஸ்ட்ரால் அல்லது வேறு சில காரணங்களால் உணவை உட்கொள்வதில் கட்டுப்பாடுகளை (டயட்) ஏற்படுத்த தொடங்கிறார்கள்.

மது, சிகரெட்
இதய நோய்கள் வராமல் தவிர்க்க சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை அதிகளவுல் சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். உடலில் இருக்கும் கொழுப்புச் சத்துகளைக் கண்காணிக்க வேண்டும். மிக முக்கியமாக புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை நிறுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரபணு
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால், இதயநோய் நிபுணர் அல்லது இதய மின் இயற்பியல் நிபுணரைச் சந்திக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு நோய்கள் மரபணு ரீதியாகவே ஏற்படுகின்றன. இதய நோய்க்கு இதுவும் காரணம். ஆனால், அதற்கான காரணங்களை அறிந்து தவிர்க்கலாம்.

பரிசோதனை
இளைஞர்கள் முன்பே இதய பரிசோதனை செய்து கொள்வதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதய பரிசோதனை செய்யாமல் உடற்பயிற்சி செய்ய இளைஞர்கள் தொடங்குகிறார்கள். பின்னர் ஜிம்மில் எடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள். டிரெட்மில், கிராஸ் வொர்கவுட் பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது இதயத்தின் தடிமனை அதிகரிக்க வைக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications