சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாய்னாவுக்கு ஆபாச ட்வீட் போட்ட சித்தார்த்.. வசமாக சிக்கி கொண்டது இப்படித்தான்.. பாய்ந்தது வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் ட்வீட் ஒன்றிற்கு, நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் பதில் ட்வீட் பதிவிட்டிருந்தது அவரை மிகப்பெரிய சிக்கலில் சிக்க வைத்துள்ளது...!

நடிகர் சித்தார்த் நடிப்பையும் தாண்டி சோஷியல் மீடியாவில் வலைதளங்களில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வருபவர்.

எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம் - 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமனம் - 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்

ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என பிசியாகவே இருப்பார்.. அரசியல் சமூகம் சார்ந்த இவரது கருத்துக்களும் இவரது ட்வீட்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அமைந்து வருகின்றன.. இதற்கு காரணம், அத்தகைய ட்வீட்கள் எல்லாம் சித்தார்த்தின் துணிச்சலின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டு வருகிறது..

சாய்னா

சாய்னா

ஆனால், இன்றைய தினம் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. சித்தார்த்தா இப்படி என்பது போன்ற வியப்புக் கேள்வியையும் எழுப்பி வருகிறது.. பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை, பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது, சித்தார்த்துக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் வரை சென்றுள்ளது..!

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஜனவரி 5ம் தேதி பஞ்சாப்புக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.. அப்போது சில போராட்டக்காரர்களால் பிரதமர் செல்லும் வழி தடுக்கப்படவும், கான்வாய் ஒரு மேம்பாலத்தில் சுமார் 15-20 நிமிடங்கள் தாமதமாகி அதற்கு பிறகு திரும்பி சென்ற நிகழ்வு நடந்தது.. இது இந்தியா முழுவதும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து சாய்னா நேவால் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில்,"என்னுடைய சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி கொள்ள முடியாது.. அராஜகவாதிகளால் பிரதமர் மீது கோழைத்தனமான தாக்குதலை, சாத்தியமான வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

சாய்னா

சாய்னா

சாய்னாவின் இந்த ட்வீட்டுக்கு சித்தார்த் இன்னொரு ட்வீட் போட்டு பதிலடி தந்திருந்தார்... "உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... ஆண்டவருக்கு நன்றி... எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் இருக்கிறது.. வெட்கப்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.. சித்தார்த்தின் இந்த ட்வீட் ஆபாசமாக இருப்பதாக கூறி கண்டனங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன..

 பிரியங்கா சதுர்வேதி

பிரியங்கா சதுர்வேதி

குறிப்பாக, சிவசேனா ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதி வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.- "இதெல்லாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத, யாருமே பயன்படுத்த தகுதியற்ற மொழியாகும்.. கருத்து வேறுபாடு எதுவாக இருந்துவிட்டு போகட்டும், அதற்காக பேசும் பேச்சில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும்.. சாய்னா நேவால் இந்த நாட்டின் விளையாட்டு பெருமை.. அவருக்கு அரசியல் ரீதியாக கருத்து சொல்ல எல்லாவித உரிமையும் இருக்கிறது... அது ஒன்றும் பிற நாட்டின் கருத்து கிடையாது.. ஆனால் அதற்கு நீங்கள் உடன்படவில்லை... விவாதம் செய்கிறீர்கள்.. அவருடைய கருத்துக்கள், யோசனைகளை கடுமையாக எதிர்த்தாலும்கூட, நீங்கள் இழிவுபடுத்தப்படவே மாட்டீர்கள்" என்று சரமாரியாக கூறியுள்ளார்.

 குற்றச்சாட்டு மறுப்பு

குற்றச்சாட்டு மறுப்பு

ஆனால், சித்தார்த்தோ தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.. நான் ஒன்றும் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை.. அவமரியாதையாக எதுவும் பார்க்கப்படவில்லை.. சொல்லப்படவில்லை அல்லது தூண்டப்படவில்லை.. காலம்" என்று பதில் தந்துள்ளார்.. ஆனாலும் சித்தார்த்தின் ட்வீட் பலரது விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.. தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் சித்தார்த்தின் ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. "இவருக்கு ஒன்று அல்லது 2 தேவைகள்... இவரது அக்கவுண்ட் ஏன் இன்னமும் இருக்கிறது? சம்பந்தப்பட்ட போலீசார் அதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ரேகா ஷர்மா ட்வீட் போட்டுள்ளார்..

நோட்டீஸ்

நோட்டீஸ்

இதனிடையே, சித்தார்த் பதிவிட்ட ட்வீட்டுக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது... அந்த அறிக்கையில், "திருமதி சாய்னா நேவால் ட்வீட்டுக்கு, நடிகர் சித்தார்த் ஆபாசமான கருத்துக்களைப் பயன்படுத்தி ஒரு பதிவு போட்டுள்ளார்.. இதை தேசிய மகளிர் ஆணையம் கண்டிக்கிறது.. பெண்களை அவமதிக்கும் மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் ஒரு பெண்ணின் அடக்கத்திற்கு மூர்க்கத்தனமானது... இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணையையும் எடுத்து கொள்கிறது" என்று தெரிவித்துள்ளது.

கண்டனம்

கண்டனம்

இயல்பாகவே மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவர் சித்தார்த்.. உபி முதல்வர் யோகி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என யாராக இருந்தாலும் ட்விட் போட்டு அவர்களின் கருத்தியல்களை விமர்சித்து வருபவர்.. இது பிரதமர் மோடி விஷயம் என்பதால்தான் சாய்னாவுக்கும் பதிலடி தந்துள்ளாரே தவிர, சாய்னா மீது எந்தவித தனிப்பட்ட கோபம் சித்தார்த்துக்கு இல்லை, ஆனாலும் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் ஒருசாரார் சொல்கிறார்கள்.

English summary
Actor Siddharth trolled for sexual innuendo in response to Saina nehwals tweet and NCW sends notice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X