Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க வீட்டு கைப்புள்ள! எங்கும் நிறைந்திருக்கும் ’வைகை’ மண் தந்த வடிவேலு! நெகிழ்ந்து கொண்டாட காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என தற்காலத்திலும் ஏதாவது ஒரு நொடி, நிமிடம், நாள் வடிவேலு எனும் மகா கலைஞனை நினைத்தோ, பேசியோ, கொண்டாடியோ, சிரிக்காமலோ யாரும் கடந்து சென்று விட முடியாது.

வைகை புயல் எனும் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் எந்த சமூக வலைதளங்களை எடுத்துக் கொண்டாலும் மக்கள் அந்த மகா கலைஞனை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து கொண்டாடி வருகின்றனர்.

கலைவாணர் தொடங்கி சின்னக் கலைவாணர் வரை ஆயிரம் நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், வடிவேலுக்கென ஒரு உடல் மொழி இருந்தது. அதுதான் உங்களிடம் என்னிடம் நம்மிடம் அந்த கலைஞனை நம்ம வீட்டு பிள்ளையாக சிம்மாசனம் போட்டு அமர வைத்தது.

வடிவேலு

வடிவேலு

லேடன் கிட்ட பேசுறியா பின் லேடன்...! பேசாம போறிய வாய்க்குள்ள கத்திய விட்டு சுத்தவா..! வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்! ஆணியே புடுங்க வேணாம்! காருக்கு எதுக்கு அச்சாணி? அப்பன் விநாயகா என்ன காப்பாத்துப்பா! இப்பயே கண்ண கட்டுதே! விட்டா கிறுக்கன் ஆக்கிருவாங்க போல இருக்கு! டூ வாட் ஐ சே! இப்படி வடிவேலுவின் திரைப்படங்களில் வரும் ஏதாவது ஒரு டயலாக்கை கண்டிப்பாக நாம் நாள்தோறும் எதாவது ஒரு இடத்தில் பயன்படுத்தி இருப்போம். அந்த அளவுக்கு நம்மையே திரையில் பிரதிபலித்தவர் தான் நடிகர் வடிவேலு.

மகா கலைஞன்

மகா கலைஞன்

உருவக்கேலி, சக நடிகர்களை எட்டி உதைப்பது என காமெடி செய்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் தன்னைத் தானே வருத்திக்கொண்டு தன்னைத்தானே உருவ கேலி செய்து கொண்டு திரையில் தோன்றி மக்களை சிரிக்க வைத்த வடிவேலு எனும் அரிய பொக்கிஷத்தை தமிழக மக்கள் அப்படியே அரவணைத்துக் கொண்டனர். கட்டபொம்மு, கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, அய்யாசாமி, வீரபாகு, வண்டுமுருகன், புல்லட்டு பாண்டி, வளையாபதி, ஸ்நேக் பாபு, ஸ்டீவ் வாக், புலிகேசி, ஸ்டைல் பாண்டி, குழந்தை வேலு, சுடலை, வெடிமுத்து, மாடசாமி, தீப்பொறி திருமுகம், அழகு, அலார்ட் ஆறுமுகம், சலூன் கடை சண்முகம், சூனா பானா, நாய் சேகர், சங்கி மங்கி, முருகேசன், படித்துறை பாண்டி, ஏகாம்பரம், கபாலி கான், வடிவுக்கரசி, புலிப்பாண்டி, கிரேட் கரிகாலன் எல்லோரும் பார்க்கும் இடம் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் 'மாமனிதர்கள்'.

மீம்ஸ்களின் மன்னன்

மீம்ஸ்களின் மன்னன்

திரைப்படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த மகா கலைஞன் சில காலம் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவர் இல்லாத குறையை கைப்புள்ளையும், ஸ்நேக் பாபுவும், கிரிகாலனும் ஏதோ ஒரு தருணத்தில் மக்களை சிரிக்க வைத்து சமன்படுத்தினர். குறிப்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உருவாகத் தொடங்கி உலா வந்த காலத்தில் வடிவேலு எல்லா வகையான கதாபாத்திரங்களுக்கும் அச்சு அசலாக அப்படியே பொருந்திப் போனார்.

ஒரு நல்ல நடிகன்

ஒரு நல்ல நடிகன்

தற்போது தான் எமோஜிக்கள் எனப்படும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் பொம்மைகளை பயன்படுத்துவது வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளாக எமோஜிக்களை எண்ணங்களை அப்படியே திரையில் கொண்டு வந்த வடிவேலு தற்போது வரையிலும் மனம் கவர்ந்த காமெடி நாயகனாகவே வலம் வருகிறார். வெறும் காமெடி என்ற வட்டத்திற்குள் மட்டும் வடிவேலுவை சுருக்கி விட முடியாது பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களை வடிவேலுக்குள் இருக்கும் ஒரு நல்ல நடிகன் வெளிப்பட்டிருக்கிறார்.

மக்கள் பாடகர்

மக்கள் பாடகர்

தேவர்மகன், எம்டன் மகன், உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது மேலும் வடிவேலுவுக்குள் ஒரு பாடகனும் மறைந்து இருக்கிறார். சில பாடல்களில் மட்டுமே அந்த பாடகன் எட்டிப் பார்த்தாலும் எப்போதுமே அவருக்கான மதிப்பு இருக்கிறது. அதனால் என்னவோ தனது காமெடி காட்சிகளில் அவ்வப்போது அந்த பாடகனையும் பயன்படுத்திக் கொண்டார் காமெடி நடிகர் வடிவேலு. காமெடியனாக, குணச்சித்திர கதாபாத்திரமாக, அண்ணனாக, தம்பியாக, அக்காவாக, மாமியாராக இப்படி இருக்கும் உறவு முறைகளில் எல்லாம் நடித்துவிட்டு, டாக்டராக, வழக்கறிஞராக, ரவுடியாக வாழ்ந்து விட்டு தற்போதும் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கும் வடிவேலு எனும் மகா கலைஞரின் பிறந்தநாள் இன்று. பலரும் வாழ்த்துகின்றனர் நாமும் வாழ்த்துவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+