‛இந்த மனசு தான் சார் கடவுள்’.. மேடையில் மாணவி வைத்த கோரிக்கை.. விஜயின் செயலால் நெகிழ்ந்த பெற்றோர்
சென்னை: நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து நடிகர் விஜய் வைர மோதிரம், ஊக்கத்தொகை, பாராட்டு சான்று வழங்கி வருகிறார். இந்த விழாவில் மேடையில் மாணவி திடீரென்று வைத்த கோரிக்கையை பணிவாக ஏற்று விஜய் செய்த செயலால் பெற்றோர் நெகிழ்ச்சியடைந்தனர்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு மாநிலம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும் ரசிகர் கூட்டம் விஜய்க்கு உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு முதல் முதலாக விஜய் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து சென்னையில் வைத்து பாராட்டினார்.
அதன்பிறகு நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி உள்ளார். 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் கட்சி துவங்கிய பிறகு முதல் முதலாக இன்று நடிகர் விஜய் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து நேரில் பாராட்டி பரிசு வழங்கி வருகிறார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகள் நடிகர் விஜய் பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். மேலும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வைர மோதிரம் வழங்கி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் செய்த ஒரு செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. அதாவது மேடையில் மாணவி ஒருவர் நடிகர் விஜயிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கிய பிறகு அவர் நடிகர் விஜயிடம் முக்கிய கோரிக்கையை வைத்தார். அதாவது தன்னுடன் பெற்றோர் வந்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தும்படி கோரிக்கை வைத்தார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்காத விஜய் உடனடியாக அவரே சென்று அங்கிருந்த சால்வை எடுத்து வந்து மாணவியின் பெற்றோர் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து அணிவித்தார். அதன்பிறகு மாணவி, அவரது பெற்றோருடன் சேர்ந்து நடிகர் விஜய் போட்டோ எடுத்து கொண்டார். இந்த செயலால் மாணவியின் பெற்றோர் மற்றும் அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து போயினர்.
-
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications