சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெருமதிப்பிற்குரிய வாக்காள பெருமக்களே! எம்பி தேர்தலில் களமிறங்கும் விஜய்! பனையூரில் பரபரத்த மீட்டிங்!

Google Oneindia Tamil News

சென்னை : நாடாளுமன்ற தேர்தல் ஜுரம் தற்போதைய பற்றி கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. அந்த வகையில் அரசியலில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் விஜய்யும் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தியது பல யூகங்களை கிளப்பி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களின் ஒருவராக நடிகர் விஜய் திகழ்கிறார். ரஜினிக்கு அடுத்தபடியாக ரசிகர் பட்டாலும் மற்றும் வியாபார பலத்தை கொண்டுள்ள அவருக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மார்க்கெட் உள்ளது.

கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்டப் பகுதிகளில் விஜய் நடிக்கும் படங்கள் டப்பிங் செய்யப்பட்டும், சில தியேட்டர்களில் நேரடியாகவும் வெளியிடப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழக நடிகரான விஜய் தற்போது தென் மாநில நடிகராக பிரபலமாக இருக்கிறார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி இல்ல “மோடிக்கு சிம்மசொப்பனம்”! அதிமுகவுக்கு கொள்கையே கிடையாது- விளாசிய உதயநிதி! ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி இல்ல “மோடிக்கு சிம்மசொப்பனம்”! அதிமுகவுக்கு கொள்கையே கிடையாது- விளாசிய உதயநிதி!

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் ரஜினிகாந்த் போலவே விஜய்யும் அரசியலுக்கு வருவார் என நீண்ட காலமாகவே யூகங்கள் கிளம்பி வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேள்வி பரபரப்பாக இருந்த காலத்தில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றினார். அதனை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்ற பெருமை அவரது தந்தையான எஸ்ஏ சந்திரசேகருக்கு சேரும். மாவட்ட மாவட்டமாக சென்று ஆலோசனைக் கூட்டம் கொடியேற்று விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என பம்பரமாக சுழன்றார்.

திரையில் கவனம்

திரையில் கவனம்

அதன்பிறகு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் ஓரம் கட்டப்பட்டார். தந்தையின் பிறந்தநாளுக்கு கூட நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் தனது பிறந்தநாளின் போது எஸ்ஏ சந்திரசேகர் தனது மனைவியுடன் மட்டும் கேக் வெட்டியது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்றது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டிருக்கிறார். அதோடு திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வாரிசு விவகாரம்

வாரிசு விவகாரம்

கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த 'பீஸ்ட்' கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்து அவர் வாரிசு படத்தையே நம்பி இருக்கிறார். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வாரிசு படத்தை திரையிட திட்டமிட்டிருந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கட்டுப்பாடு காரணமாக அங்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி சீமான், தவாக வேல்முருகன், இயக்குனர் பேரரசு, லிங்குசாமி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எம்பி தேர்தலில் விஜய்

எம்பி தேர்தலில் விஜய்

இந்நிலையில் திரைத்துறை தாண்டி மொழி சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் வாரிசு திரைப்படம் குறித்த சர்ச்சைகள் மாறி இருக்கிறது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் நடிகர் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட இருக்கின்றனர். வழக்கம் போல் விஜய் ஆதரவுடன் அவர்கள் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது.

பிரச்சாரம்?

பிரச்சாரம்?

விஜயின் புகைப்படம் விஜய் மக்கள் இயக்கக் கொடி ஆகியவற்றை பயன்படுத்தியே அவர்கள் வாக்கு சேகரிக்க இருக்கிறார்கள். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டபோது வேட்பாளர் பட்டியல் என அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜய் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக கூறப்படுகிறது. மேலும் பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசனை நடத்தி வருவதாகவும் விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.

ரசிகர்களுடன் ஆலோசனை

ரசிகர்களுடன் ஆலோசனை

இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விஜய் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் பணையூரில் உள்ள தனது விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து பேசி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சேலம் நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்ட ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வாரிசு திரைப்படத்தில் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி

தொடர்ந்து ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போல தனது திரைப்படம் வரும்போதெல்லாம் ரசிகர்களை சந்திப்பதும் அதன் பிறகு அமைதியாகி விடுவது விஜய் வழக்கம் அல்ல எனவும் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அதற்காக தீவிரம் காட்டி வருகிறார் என்கின்றனர். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆக தமிழகத்திற்கு புதிதாக வரும் அரசியல் கட்சியை வரவேற்போம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

English summary
As the parliamentary election fever is on, the main parties in Tamil Nadu have started the election work. In that way, actor Vijay, who is showing interest in politics, also held a consultation with his fans, which has sparked many speculations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X