ஆக்சிடெண்ட் பண்ணி விட்டு எஸ்கேப்.. பிக்பாஸ் பிரபலத்தின் கணவரை தேடும் காவல்துறை.. சென்னையில் பரபர..!
சென்னை : திரைப்பட நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான நடிகை ஆர்த்தியின் கணவரும் நடிகருமான கணேஷ்கர் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் திரை உலகில் ஏராளமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்தி.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிகளிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் இன்னும் பிரபலம் ஆனார்.

நடிகை ஆர்த்தி
நடிகர் வடிவேலுவுடன் அவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் பலரது பேவரிட்டாக உள்ளது. அவரது கணவரான கணேஷ்கரும் சிறுவயதில் இருந்தே தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார்.

நடிகர் கணேஷ்கர்
தற்போது சில படங்களில் நடித்து வரும் கணேஷ்கர் சாலை தடுப்பில் தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவானதாக அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கணேஷ்கர் நேற்று பட்டினப்பாக்கம் மெரினா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.

கார் விபத்து
சாலை தடுப்பில் வேகமாக கார் மோதிய நிலையில் கார் சேதமடைந்தது. அப்போது அவரது காரின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து கணேஷ்கர் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனது கணவரை காணவில்லை என நடிகை ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை
குடிபோதையில் இருந்த போது கணேஷ்கர் விபத்தை ஏற்படுத்தினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என நடிகை ஆர்த்தி அளித்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications