5 ரூபாய் கூட உதவும்.. பிச்சை என சொல்லி இழிவு படுத்த வேணாம்.. குஷ்புவுக்கு நடிகை அம்பிகா அட்வைஸ்!
சென்னை: நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, மகளிர் உரிமைத்தொகை பற்றி பேசிய பேச்சுக்கு நடிகை அம்பிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பிரஸ் மீட்டில் பேசிய விஷயம் சர்ச்சைக்கு உள்ளானது. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார் குஷ்பு.

பெண்கள் உட்பட அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பிச்சை என விமர்சித்து பேசிய குஷ்புவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுகவினர் நடிகை குஷ்புவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் குஷ்பு பேச்சைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
எனினும் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார் குஷ்பு. தனது பேச்சை வைத்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார் குஷ்பு.
இந்நிலையில் நடிகை அம்பிகா, குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களுக்கு உதவும் திட்டத்தை பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, இழிவாகப் பேசக்கூடாது என குஷ்புவுக்கு பாடம் எடுத்துள்ளார் அம்பிகா. அம்பிகாவின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகை அம்பிகா, "எதுவாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி... ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ.. ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட முடியாவிட்டால் எதுவும் பேசக் கூடாது. இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாது. எதற்காக பிச்சை என்ற வார்த்தையை சொல்லணும்? 5 ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications