அல்லாஹ்வுக்கு நன்றி..! ரம்ஜான் நாளில் உருக்கமான பதிவிட்ட குஷ்பூ! ஓ இதுதான் அதுக்கு காரணமா?
சென்னை : ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று தனக்கு மிக முக்கியமான நாள் என்றும், அல்லாஹ்வுக்கு நன்றி என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ சுந்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு சுந்தர்.சி.யின் இயற்பெயர் நகாத் கான் என்பது பலருக்கு இன்னும் தெரியாது. 1980ல் சினிமா துறைக்குள் நுழைந்த அவர், தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல் முதல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நாயகியாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் சினிமா துறையில் குஷ்பு மிக முக்கியமான நடிகையாக கோலோச்சிய அவர், நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். அப்போது சினிமாவுக்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து நடித்து வந்தார்.
நல்ல சந்தர்ப்பம்..! சமூகத்தில் ஒற்றுமை சகோதரத்துவம் மேம்படுத்தட்டும்..! பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து.

குஷ்பூ சுந்தர்
பல படங்களில் நாயகியாக நடித்து வந்த அவர், பின்னர் அக்கா உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வந்தார். மிகவும் பிசியான நடிகையாக இருந்த போதே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தனியார் தொலைக்காட்சியில் அவர் வழங்கிய கேக் ஷோ அப்போதே பலத்த வரவேற்பை பெற்றது.

அரசியல் பிரவேசம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்த இவரது திறமை காரணமாக தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் பிரபலமாக இருந்த குஷ்பூ, பெரியார் மீது இருந்த பற்றால் 2010ல் திமுகவில் இணைந்தார்.அவர் 2014ல் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார்.

பாஜக தேசிய செயற்குழு
அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் குஷ்பு சுந்தர் ஹிஜாப் விவகாரத்தின் போது மிகத் தீவிரமான கருத்துகளை முன்வைத்தார். இந்நிலையில் தற்போது தீவிர பாஜக விசுவாசியாக இருக்கும் அவர், இன்று தனக்கு மிக முக்கியமான நாள் என்றும், அல்லாஹ்வுக்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அல்லாஹ்வுக்கு நன்றி
அதற்கு என்ன காரணம் என்றால் இன்று அவரது அம்மாவுக்கு பிறந்தநாள். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்," அம்மா!! உண்மையாகவே கடவுள் தான் அனுப்பினார். எல்லாம் மாற்றத்தக்கது ஆனால் ஒரு தாய் மாற்ற முடியாது. நான் சந்தித்ததில் மிக அழகான பெண் என் "அம்மி". இன்று அவர் தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அன்பு, இரக்கம், பச்சாதாபம், மனிதாபிமானம் மற்றும் கருணை ஆகியவற்றின் தூதரை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மி!" என பதிவிட்டுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications