என்னாது GoBackModiயா? #வாயை_மூடு_Podi சும்மா நம்ம ரைமிங் எப்படி? ஓவியாவுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஓவியா Go Back Modi என பதிவிட்டதற்கு பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் அவரை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார். அவரது வருகைக்கு மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அவரது எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். இதையடுத்து அவருக்கு எதிராக கோஷங்களை முழங்கினர். மேலும் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்பை பலர் காண்பித்தனர்.
சிலிண்டர் விலையேற்றம்.. 'மக்களுக்கு மோடி அரசின் கொடூர பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிக்கை

தூத்துக்குடி
அரியலூர் அனிதா தற்கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் டீசல் விலை, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத போக்கை கண்டித்து சமூகவலைதளங்களில் மோடிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. அந்த வகையில் நடிகை ஓவியாவும் தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.

ஓவியா ட்வீட்
தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவியா GoBackModi என பதிவிட்டிருந்தார். தமிழகத்தில் இருக்கும் ஓவியாவின் சொந்த மாநிலம் கேரளம், மோடி தமிழக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கேரளாவிற்கும் சென்றார். எனவே மோடியின் தமிழக வருகையை எதிர்க்கிறாரா இல்லை கேரள வருகையை எதிர்க்கிறாரா என்பது தெரியவில்லை.

ரைமிங்
இவரது ட்வீட் வைரலான நிலையில் இவர் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஓவியாவின் ட்வீட்டிற்கு பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் # வாயை_மூடு_ Podi. சும்மா ரைமிங்கா இருக்கானு சொல்லி பார்த்தேன்.

திமுகவின் திசை திருப்பும் செயல்
உன்னை அவமதிக்க ஒன்று இல்லை. பிக்பாஸ் சீசனை நான் அசை போடுகிறேன். நான் எப்போதும் உனக்கு எதிரானவள்தான். நான் சரியானதை தேர்வு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ள காயத்ரி, இது திமுகவின் திசை திருப்பும் முயற்சி. நான் திமுகவை விமர்சித்து வருவதால் ஓவியாவை இது போல் செய்ய தூண்டியுள்ளார்கள் என காயத்ரி தெரிவித்துள்ளார்.