சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜராஜன் இந்து மன்னன் இல்லை என்று எப்படி சொல்லலாம்.. கமல்ஹாசனுக்கு கஸ்தூரி சொன்ன நூதன விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: ராஜராஜ சோழன் இந்து மன்னன் இல்லை என எப்படி சொல்லலாம் என்று கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி நூதன விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அந்த படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசன் ஐமேக்ஸ் 3 டி வடிவத்தில் பார்த்து ரசித்தார்.

இந்த படம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவரிடம் ராஜராஜ சோழன் குறித்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இவரது இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது.. கமல்ஹாசன் அதிரடி ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது.. கமல்ஹாசன் அதிரடி

இந்து மதம்

இந்து மதம்

அவர் தனது பேட்டியில் கூறுகையில் இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் இருந்தது. அது ஆங்கிலேயர்கள் நமக்கு வைத்த பெயர். என்ன சொல்வதென்று தெரியாமல் வைத்தார்கள் என தெரிவித்திருந்தார். அதாவது இயக்குநர் வெற்றி மாறனின் கருத்துக்கு ஆதரவாகவே கமலும் கூறியிருந்தார்.

கஸ்தூரி நூதன விளக்கம்

கஸ்தூரி நூதன விளக்கம்

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கமல் ஒரு encyclopedia. அவர் தன் அறத்தையும் அறிவாற்றலையும் அரசியல் narrative காக சமரசம் செய்து கொள்வது வருத்தம் .
ஆதி மனிதன் தன்னை ஒரு போதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில் homosapiens என்ற பேரே இல்லை. so அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசிய போது, ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள்.

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன்

இந்தியா என்பது ஒரு தேசமில்லை. ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது என்றும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர வந்து கொண்டிருக்கிறது.

English summary
Actress Kasthuri replies to kamal haasan about his comment on Rajaraja cholan was not Hindu king. At that period there was no religion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X