இமோஜிய பாருங்க.. 3 மாநில தோல்வி! கார்கே சொன்ன அந்த வார்த்தை! காங்கிரஸை கிண்டல் செய்த நடிகை குஷ்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதை குறிப்பிட்டு பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு சிரிக்கும் இமோஜியுடன் கிண்டல் செய்துள்ளார்.

மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் மிசோராம் தவிர பிற 4 மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

Actress Khusbhu teasing Mallikajun Kharge who calls for India Allaince Meeting after congress lost 3 state

இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற உள்ளது. அங்கு ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. மாறாக மத்திய பிரதேசத்தில் இமாலய வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ் கட்சி ஏமாற்றமடைந்துள்ளது.

இதுதவிர ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்த நிலையில் தற்போது இருமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மொத்தம் 4 மாநில தேர்தல்களில் 2 மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் 3 மாநிலங்களில் தோல்வியடைந்துள்ளது. அதேவேளையில் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் அரியணை ஏறியுள்ளது.

இந்நிலையில் தான் நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியையும் அதன் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவையும் கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு'' எனக்கூறி வேடிக்கையாக சிரிக்கும் 9 இமோஜிக்களை பதிவிட்டுள்ளார்.

அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 5 மாநில தேர்தல் நடந்த நிலையில் ‛இந்தியா' கூட்டணியின் செயல்பாடு என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று ரிசல்ட் வந்த நிலையில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த சூழலில் மல்லிகார்ஜுன கார்கே ‛இந்தியா' கூட்டணி ஆலோசனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் இன்று தோற்ற நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த அழைப்பை தான் நடிகை குஷ்பு கிண்டல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+