எனக்கு இட்லியே பிடிக்காது.. என் பேர ஏன் வெச்சாங்க? நடிகை குஷ்புவின் பதிலால் சூப்பர் சிங்கரில் கலகல

நடிகை குஷ்பு தனக்கு இட்லியே பிடிக்காது என்றும், தன்னுடைய பெயரை அதற்கு ஏன் வைத்தார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை குஷ்பு தனக்கு இட்லியே பிடிக்காது என்றும், தன்னுடைய பெயரை அதற்கு ஏன் வைத்தார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர் போட்டியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்து இருக்கிறார்.

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. விஜய் டிவியின் மூலம் பிரபலமான பலர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு, பிக் பாஸ், குக் வித் கோமாளி, நீயா நானா, கேபிஒய் சாம்பியன்ஸ், பிபி ஜோடிகள் என அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் மக்களை பெரிய அளவில் கவர்ந்து உள்ளன.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

இதில் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. ஒரு ஆண்டு விட்டு மறு ஆண்டு பெரியவர்கள், சிறுவர்களுக்கு என மாற்றி மாற்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சீரியர், ஜூனியர் என 2 வகையான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் பாடி பிரபலமானவர்கள் சினிமாவில் முக்கியமான பின்னணி பாடகர்களாக வளர்ந்து உள்ளார்கள்.

பிரபலமான பாடகர்கள்

பிரபலமான பாடகர்கள்

செந்தில், ராஜலெட்சுமி, சத்யபிரசாத், சாய் சரண், திவாகர், நித்யஸ்ரீ, ரக்‌ஷிதா, சிவாங்கி, ஸ்ரீராம், பூவையார், ஸ்ரீநிசா என எண்ணிக்கையில் சொல்ல முடியாத அளவிற்கு பலர் சூப்பர் சிங்கர் மூலமாக பிரபலங்களாக உயர்ந்து இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் சீனியர்களுக்கான 9 வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் 9

சூப்பர் சிங்கர் 9

டாப் 20 பாடகர்கள் தேர்வு செய்யப்பட்டு வாரம் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது வைல்டு கார்டு சுற்று மூலம் சாய் விக்னேஷ் என்ற பாடகர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 90ஸ் பாடல்கள் சுற்று நடைபெற்றது. இதில் 90களில் வெளியான திரைப்பட பாடல்களை போட்டியாளர்கள் பாடி அசத்தினர்.

குஷ்புவிடம் போட்டியாளர் கேள்வி

குஷ்புவிடம் போட்டியாளர் கேள்வி

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த குஷ்பு கலந்துகொண்டார். அவரிடம் போட்டியாளர்களில் ஒருவரான பிரசன்னா "என்னைக்காவது குஷ்பு இட்லி சாப்பிட்டு உள்ளீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். இதனை கேட்ட தொகுப்பாளர் பிரியங்கா, போட்டியாளர்கள், பார்வையாளர்கள் சிரித்தனர்.

இட்லியே பிடிக்காது

இட்லியே பிடிக்காது

இதற்கு பதிலளித்த குஷ்பு, "உண்மையை சொல்லப்போனால் எனக்கு இட்லியே பிடிக்காது. அதற்கு காரணம் ஒவ்வொரு முறை உடல்நிலை சரியில்லாமல் போனால் எனக்கு இட்லிதான் தருவார்கள். எனவே இட்லி சாப்பிடும்போது எல்லாம் உடம்பு சரியில்லாததைபோல் தெரியும். இதுவரை எனக்கு பயந்துகொண்டு யாருமே குஷ்பு இட்லியை சாப்பிட கொடுத்ததே. ஏன் குஷ்பு இட்லி என்ற பெயர் வந்தது என்பதும் எனக்கு தெரியாது. யாராவது அதை கொடுத்தால் சாப்பிடுவேன்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+