இயக்குநரோட என்ஜாய் செய்வீங்க.. 10 வருஷம் கழித்து புகாரா?.. மீ டூ குறித்து ரேகா நாயர் சர்ச்சை பேச்சு
சென்னை: 10 வருஷம் நல்லா என்ஜாய் பண்ணிட்டு, அதுக்கப்புறமா வந்து அந்த இயக்குநர் என்னை அங்க தொட்டார், இங்க தொட்டார்னு சொன்னா அதை ஏற்றுக் கொள்ள முடியாது என மீ டூ புகார் குறித்து நடிகை ரேகா நாயர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
Recommended Video
எந்த துறையாக இருந்தாலும் அங்கு பெண்கள் ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அடுத்தடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்ற ஒரு வாதம் உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டு எல்லா ஆண்கள் மீதும் அல்ல, சபல புத்தியில் திரியும் சில ஆண்கள் மீது மட்டுமே!
ஆனால் சினிமா துறையில் அண்மைக்காலமாக சில நடிகைகள் கூறுகையில் அட்ஜெஸ்ட்மென்ட் இருந்தால் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என இரவு தங்கும் நாட்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது என பலர் இந்த பிரச்சினை குறித்து பேசி வருகிறார்கள்.

வக்கிரம்
இந்த பாலியல் வக்கிரம் தற்போது பள்ளி வரை வந்துவிட்டது. மார்க் வேண்டுமானால் தனியே டியூஷன் வர வேண்டும், தனியே ஸ்டாஃப் ரூமுக்கு வர வேண்டும் என்றெல்லாம் மாணவிகளை கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நடிகை ரேகா நாயர்
இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய தகவல்களை அளித்துள்ளார். அவரை நடிகை ஷகிலா பேட்டி எடுத்தார். ரேகா நாயர் கூறுகையில், அக்கா ஒருவர் தம்மிடம் வந்து வழிந்து கொண்டு பேசினாலே அவர் ஏன் வழிகிறார், அதன் நோக்கம் என்ன? அவர் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நன்றாக யூகித்துவிடுவோம்.

விரல் சூப்பும் பிள்ளைகளா
இது கூட தெரியாத விரல் சூப்பும் பிள்ளைகள் நாம் அல்ல. அப்படியிருக்கும் போது ஒரு படத்தை நடித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து அந்த இயக்குநர் என்னை அங்க தொட்டாரு, இங்க தொட்டாரு என புகார் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அப்படி என்றால் 10 ஆண்டுகளாக இந்த பெண்கள் மறுப்பேதும் சொல்லாமல் உல்லாசத்தை என்ஜாய் செய்தார்கள் என்றுதானே அர்த்தம்.

பணம் கொடுக்கிறாங்க
ஆண்கள் பணம் கொடுக்கிறார்கள் என புகார் கொடுக்கிறீங்களே, அவர்கள் பணம் கொடுக்கும் போது அதை என்ஜாய் செய்கிறீர்களே. இதுவரை எந்த டைரக்டரும் என்னை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு வா என அழைத்ததில்லை. ஒரு இயக்குநரோ அல்லது ஒரு நடிகையோ உடலுறவு கொள்கிறார்கள் என்றால் இருவரும் விரும்பியே நடக்கிறது. இதை தாண்டி எந்த இயக்குநரும் நீ படுத்தால்தான் ஷூட்டிங் என யாரும் சொன்னது கிடையாது என ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

மீ டூ புகார்
பிரபல பின்னணி பாடகி தொடங்கி பல பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் துறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து புகார்களை தெரிவித்தனர். ஒரு படத்தில் வாய்ப்பை பெற தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என சில ஆண்கள் கேட்பதால் பெண்கள் தாங்கள் விரும்பிய துறையில் இருந்து வெளியேற முடியாமலும் இந்த பாலியல் தொல்லைகளுக்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவிக்க இயலாமலும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பல நடிகைகள் புகார்களை கூறி வரும் நிலையில் ஆண்கள் மீது மட்டுமே தவறில்லை என்பது போல் ரேகா நாயர் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications