சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி “ராஷ்டிர பாஷையா”? மூஞ்சி.. ‘ஜி’க்கு குத்துவிட்ட நடிகை வினோதினி -ஜிஎஸ்டிக்கு பின் அடுத்த வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: ஜிஎஸ்டியை நகைச்சுவையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு பிரபலமான நடிகை வினோதினி, தற்போது இந்தி திணிப்பை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான வினோதினி கடந்த சில மாதங்களாக மத்திய அரசையும், அதன் செயல்பாடுகளையும் விமர்சித்து நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் ஜிஎஸ்டி வரியை நகைச்சுவையாக விமர்சித்து அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளரிடம் முதலாளி ஜிஎஸ்டி வரி கேட்பதைபோல் அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மாஸ்க், சானிடைசருக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி வழக்கு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் மாஸ்க், சானிடைசருக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி வழக்கு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்

 நிர்மலா மீது விமர்சனம்

நிர்மலா மீது விமர்சனம்

"இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்கிறது." என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை டிரோல் செய்யும் வகையில் ஹோட்டல் உரிமையாளர் போல் பேசிய விநோதினியின் வீடியோ டிரெண்டானது.

 தந்தையுடன் வீடியோ

தந்தையுடன் வீடியோ

இந்த வீடியோவை தொடர்ந்து விநோதினி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தன்னை போலீஸ் சிறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு தன்னுடைய தந்தையும் அவர் வெளியிட்ட வீடியோவும் நகைச்சுவை கலந்து அரசியல் பேசுவதாக அமைந்தது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

 இந்தி திணிப்பு எதிர்ப்பு

இந்தி திணிப்பு எதிர்ப்பு

இந்த நிலையில் மேலும் ஒரு வீடியோவை நடிகை வினோதினி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது மத்திய அரசின் இந்தி திணிப்பை விமர்சிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. அதில் நடித்திருக்கும் ஆண் ஒருவரிடம் இந்தியில் கலந்துரையாடுவதைபோல் அது எடுக்கப்பட்டு உள்ளது. 'ஜி' என்று அழைக்கும் அவரிடம் 'கியா ஜி' என்று கேட்கிறார் வினோதினி.

 இந்தியில் பேசி வீடியோ

இந்தியில் பேசி வீடியோ

உடனே அவர் 'ஹிந்தி சீகோ ஜி' என்று சொல்ல வினோதிநிதி, 'கியூ ஜி' என்கிறார். அதற்கு அந்த நபர், 'ஹமாரே பீச் மே அச்சே தோஸ்தியோகா ஜி'. என்றார். இதை கேட்ட அவர், 'ஜி ஜரூர். மே படுங்கி.' என்று சிரித்துக் கொண்டே பதிலளிக்கிறார். அப்போது அந்த நபர்.. 'ஆர்.. ஆர்..' என்று இழுத்தபடியே 'ஹிந்தி ஹமாரா ராஷ்டிரா பாஷா (இந்தி நமது தேசிய மொழி)' என்கிறார்.

 இந்தி தேசிய மொழியா?

இந்தி தேசிய மொழியா?

உடனே வினோதினி, 'அப்படியா ஜி' என்று சிரித்துக் கொண்டே கேட்க, அந்த நபரும் 'ஹான் ஜி' என்று பதிலளித்தார். உடனே கோபப்படும் வினோதினி, 'என்னடா ஹான் ஜி. மூஞ்சி' என முகத்தில் குத்திவிட்டு 'தான்யவாத்' என கூறுவதுடன் அந்த வீடியோ முடிவடைந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

 இந்தி திணிப்பு எதிர்ப்பு

இந்தி திணிப்பு எதிர்ப்பு

கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்தியை திணிக்கும் பரிந்துரைகள் இடம்பெற்றதாக கூறி கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனை கண்டித்து சில வாரங்களுக்கு முன் பெரும் போராட்டத்தையே திமுக நடத்தியது. இது மேற்கு வங்கம், கர்நாடகம், கேரளாவிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் நேற்று திமுகவை சேர்ந்த தங்கவேலு என்பவர் இந்தி திணிப்பை கண்டித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Vinothini, who is famous for posting a humorous video. After criticizing GST, has now released a video criticizing the imposition of Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X