கவனீச்சிங்களா.. கமல் பாதி ரஜினி மீதி.. புல்லட்டோடு புத்தாண்டு வாழ்த்து கூறிய ஜெயக்குமார்..எப்படி?
சென்னை: 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான டி ஜெயக்குமார் நடிகர்களான கமல் பாதி, ரஜினி மீதி எனும் வகையில் வித்தியாசமான முறையில் புல்லட்டில் வந்து புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
2022ம் ஆண்டு நேற்றுடன் விடைபெற்றது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறந்தது. இந்தியாவில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு முன்பே பல நாடுகள் கொண்டாடின.
முதல் நாடாக நியூசிலாந்தில் 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, பிஜி, பப்புவா நியூகினியா உள்ளிட்ட தீவு நாடுகளில புத்தாண்டுகள் பிறந்தன.

வாணவேடிக்கையுடன் வரவேற்பு
புதிதாக நேற்று பிறந்த 2023ம் ஆண்டு புத்தாண்டை வெளிநாட்டினர் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் வரவேற்றனர். இந்தியாவிலும் பல இடங்களில் வாணவேடிக்கைகள் போடப்பட்டன. பொதுமக்கள் கேக் ஊட்டியும், கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஏராளமானவர்கள் வெளியிடங்களுக்கு சென்று பார்ட்டியுடன் புத்தாண்டையை கொண்டாடினர்.

ஜனாதிபதி வாழ்த்து
இந்த புத்தாண்டையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு, ‛‛அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சக குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், நல்வாழ்த்துக்களும். 2023 நம் வாழ்வில் புதிய உத்வேகங்கள், இலக்குகள் மற்றும் சாதனைகளைக் கொண்டுவரட்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதி ஏற்போம்" என கூறியிருந்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில், ‛‛2023ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்! அது நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் கிடைக்கட்டும்'' என தெரிவித்துள்ளார். இதேபோல் மத்திய அமைச்சர்கள், கட்சிகளின் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமாக வாழ்த்திய டி ஜெயக்குமார்
இந்நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான டி ஜெயக்குமார் வித்தியாசமான முறையில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 3 வகைகளில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு பதிவில் டி ஜெயக்குமார் புல்லட் ஓட்டுவது போல் உள்ளது. அதில் உள்ள அவரது பதிவெண் பலகையில் புத்தாண்டு வாழ்த்து என எழுதப்பட்டுள்ளது.

கமல்பாதி.. ரஜினி மீதியா?
இன்னொரு பதிவில் சந்திரமுகி படத்தில் வரும் பின்னணி இசையுடன் புல்லட்டில் அவர் இருக்கும் வகையில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் நடித்த படத்தில் வரும் இளமை இதோ இதோ எனும் பாடல் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் பிரபலமாகும். அந்த பாடலில் கமல்ஹாசன் புல்லட்டில் வருவார். அந்த வகையில் தற்போது ஜெயக்குமார் புல்லட் பைக்கோடு, ரஜினி நடித்த படத்தின் பிஜிஎம்மை பயன்படுத்தி கமல்பாதி, ரஜினி மீதி எனும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

ஆளுநர் ஆர்என் ரவி வாழ்த்து
முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவர், ‛‛உலகின் நிலையான அமைதி மற்றும்நல்லிணக்கத்துக்காக உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நமது தேசம், 2023-ம் ஆண்டில் நம்பிக்கையுடனும், அபரிமிதமான தைரியத்துடனும் நுழைகிறது. புத்தாண்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும்'' என கூறியிருந்தார்.

முதல்வர் வாழ்த்து,
முதல்வர் முக ஸ்டாலின், ‛‛கடந்த ஆண்டு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. தமிழகம் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாகத் தகுதி பெற்றுள்ளது. இது, திமுக அரசைச் சேர்ந்தவர்களின் உழைப்புக்கு கிடைத்த சான்றிதழ். 2023-ம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக, பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, தொடர்ந்து பாடுபடுவோம். சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக விளங்க தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பில் மட்டுமே கவனம்செலுத்தி உயரிய லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும். அந்த கனவை நனவாக்க உழைக்க வேண்டும். 'நான் முதல்வன்'- என்ற என்னுடைய கனவுத் திட்டத்தின் நோக்கமே அதுதான். கடந்த ஆண்டைப் போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும். புத்தாண்டே வருக. புது வாழ்வைத் தருக'' என தெரிவித்து இருந்தார்.

பிற தலைவர்களும் வாழ்த்து
இதேபோல், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி உள்ளிட்ட அனைவரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications