Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருபுறம் சட்டம்.. மறுபுறம் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்திக் கொள்ள அனுமதி? கொந்தளிக்கும் ஆர்பி உதயகுமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்வதற்கான அவசர தடை சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றி, அதை நடைமுறை படுத்தாமல் இரட்டை நிலையை கடைப்பிடித்து, இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக அரசு மூழ்கடிப்பதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், அதற்கென குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின்படி சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கிய நிலையிலும் இன்னும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவித்தது. எனினும், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆர்பி உதயகுமார்

ஆர்பி உதயகுமார்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டு மிகப்பெரிய சமூகக் கொடுமை, சமூக சீரழிவு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயம் தானா?

எந்த நோக்கத்திற்காக

எந்த நோக்கத்திற்காக

இன்றைக்கு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிற இந்த ஆன்லைன் சூதாட்டத்தால், பாதிக்கப்பட்ட அனைவரும் இன்றைக்கு இந்த கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை சட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு உடனே இன்றே அதை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பாரா?

கவலையோடு காத்திருக்கின்றனர்

கவலையோடு காத்திருக்கின்றனர்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதலை பெற்று, அது உடனே நடைமுறைக்கு கொண்டுவர இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதையும், இன்றைக்கு மக்கள் எதிர்பார்த்து கவலையோடு காத்திருக்கிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 30 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இது குறித்து என்ன நிலைமை அதைத்தான் நாம் இன்றைக்கு விவாதிக்கின்றோம். மக்களிடம் கேட்கப்பட்டதன் அடிப்படையில் 10,735 மின்னஞ்சல் புகார்கள் வந்துள்ளன. விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று 10,708 புகார்களில் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 2 லட்சம் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ,ஆன்லைனில் 67% பேருக்கு கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது என்றும், அந்த அறிவிப்பு அவர்களுடைய கவனம் செலுத்தும் திறமைகள் 75% குறைந்து இருக்கிறது எனவும் அந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் விளையாட்டு ஆணையம்

ஆன்லைன் விளையாட்டு ஆணையம்

அரசு தாக்கல் செய்த தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2022, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2022 கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் பெயரில் இந்த சட்ட உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ஆன்லைன் விளையாட்டை கண்காணிப்பது, வங்கிகளுக்கு தெரியாமல் பணப்பரிவர்த்தனை செய்வது ஆகியவை அடங்கும், ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைக்கப்படுகிறது என்றும் அரசு செய்தி குறிப்பிலே அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இரட்டை நிலை

இரட்டை நிலை

இந்த சட்டத்தினுடைய வலிமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த அரசு விழிப்புணர்வு செய்கிறதா அல்லது நாடகம் நடத்துகிறதா? ஒரு புறத்தில் நாங்கள் சட்டத்தை இயற்றுகிறோம். ஒரு புறத்தில் நீங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று இந்த அரசின் இரட்டை நிலையை பார்க்கிற போது வேதனைதான் எஞ்சியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை உண்மையாகவே ரத்து செய்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து தந்திட இந்த அரசு முன்வருமா என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+