ஓபிஎஸ் உடன் இணைந்த மாஜி.. திரண்டுவந்த படை.. தங்கமணி கோட்டையில் தட்டித் தூக்கிய பன்னீர் டீம்! போச்சா?
சென்னை : நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். அவரோடு மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் பலரையும் அழைத்து வந்திருப்பதால், ஈபிஎஸ் அணியின் தங்கமணி தரப்புக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தனது தரப்பை வலுப்படுத்த ஓபிஎஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருவது ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு மிகுந்த கொங்கு மண்டலத்திலேயே ஓபிஎஸ் அணி பலம் பெற்று வருவது ஈபிஎஸ் தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேகம் காட்டும் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரை நியமித்துள்ள நிலையில், அடிமட்ட பொறுப்பாளர்கள் வரை நியமிக்கும் பணிகளில் அவரது தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் பலரையும் தங்கள் அணிக்குள் இழுத்து வருகின்றனர்.

தங்கமணி கோட்டையில்
அந்தவகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணியின் எஃகு கோட்டையான நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டையைப் போட்டுள்ளது ஓபிஎஸ் அணி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, சிட்டிங் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் நேற்று முன்தினம் சென்ன்னையில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அவருடன் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் அணையில் இணைந்துள்ளனர். இதனால் சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புதிய பொறுப்பாளர்கள் செய்த வேலை
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேட்சையாக போட்டியிட்டார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டதால் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த சந்திரசேகரன் வேறு எந்த கட்சியிலும் இணையாமல் இருந்து வந்தார். ஓபிஎஸ்ஸால் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் முயற்சியால் அவர் ஓபிஎஸ் அணிக்கு சென்றுள்ளார்.

200க்கும் மேற்பட்டோர்
நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டார் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகர். அவருடன் மாவட்ட கவுன்சிலர் சிவப்பிரகாசம், கொல்லிமலை அதிமுக ஒன்றிய சேர்மன் மாதேஸ்வரி, துணை சேர்மன் கொங்கம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் தனுஷ்கோடி, லட்சுமி, பாப்பாத்தி, பாலுசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராசு, செல்லமுத்து, நாகலிங்கம், துணைத் தலைவர் சங்கீதா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், சின்னத்துரை மற்றும் 6 கூட்டுறவு சங்க இயக்குனர்கள், மூணு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர்கள் ஓபிஎஸ் அணையில் இணைந்துள்ளனர்.

எடப்பாடி டீமுக்கு பின்னடைவு
இதனால் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முக்கியமான நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணிக்குத் தாவிய தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கடுமையாக அப்செட்டாகி விட்டாராம். மேற்கொண்டு யாரும் ஓபிஎஸ் அணிக்குத் தாவி விடக்கூடாது, நீங்கள் தான் பொறுப்பு என ஒன்றிய செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறாராம் தங்கமணி.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications