சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை... கூட்டணிக் கட்சிகளை மிரள வைத்த அதிமுக..!

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அதிமுக தலைமை.

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை சாதகமாக கொண்டு ஆட்சியில் பங்கு கோரும் திட்டத்துடன் இருந்து வந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாற்று வழிகளை தேட ஆரம்பித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அது எதையும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

90 நிமிடங்களில் 100 மி.மீ.. தூத்துக்குடியில் மிக கன மழை! தென் மாவட்டங்கள் உஷார்- தமிழ்நாடு வெதர்மேன்90 நிமிடங்களில் 100 மி.மீ.. தூத்துக்குடியில் மிக கன மழை! தென் மாவட்டங்கள் உஷார்- தமிழ்நாடு வெதர்மேன்

கூட்டணிக் கணக்கு

கூட்டணிக் கணக்கு

வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்பது என்ற திட்டத்தில் இருக்கிறது அதன் கூட்டணிக் கட்சிகள். ஆனால் அப்படியொரு கனவில் இருந்தால் அதனை இப்போதே கலைத்து விடுங்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட்டது அதிமுக தலைமை. கூட்டணி ஆட்சி என்பதை பகிரங்கமாக கூறுவதற்கு பதில் தேமுதிக மூன்றாவது அணி என குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

பேச்சுக்கே இடமில்லை

பேச்சுக்கே இடமில்லை

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணி, தனித்துப் போட்டி என எந்த முடிவெடுத்தாலும் அதனைப் பற்றி கவலைப்படும் எண்ணத்தில் இல்லை இ.பி.எஸ். இதில், பாமகவை மட்டும் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என சற்றே விரும்புகிறார் இ.பி.எஸ். ஆனால் அதற்காக பாமகவின் கோரிக்கையான துணை முதல்வர் கோரிக்கையையும் ஏற்க மனமில்லை அவருக்கு.

வழியில்லை

வழியில்லை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பின்னணியில் இருப்பது திமுக. ஆச்சரியமாக இருக்கிறதா, ஆம், திமுகவில் ஏறத்தாழ திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சீட் பங்கீடு வரை எழுபது சதவீதம் முடிந்துவிட்டது. இந்த சூழலில் அங்கு புதிய கட்சிகளுக்கு கதவு திறக்கப்படாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.

பாஜக -அதிமுக

பாஜக -அதிமுக

பாஜக மேலிடத்தை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், கன்டிஷன்கள் இல்லாமல் அதிமுக கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவும் தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் நீடிக்கவே மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பிடிக்கப் போகிறது என்பது தான் வழக்கம்போல் இந்த முறையும் மர்மமாகவே இருக்கிறது.

English summary
Admk leadership shocked the coalition parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X