• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"முஸ்லிம் ஓட்டுக்கள் வேணாமா.. அந்த ஜாதியினர் மட்டும் போதுமா".. விமர்சனத்துக்குள்ளான அதிமுக குழு!

|

சென்னை: "முஸ்லிம், தலித் ஓட்டுக்கள் இவங்களுக்கு வேணாமா? வெறும் கொங்கு, முக்குலத்தோர், வன்னியர் வாக்குகள் மட்டும் போதுமென்று முடிவு செய்துவிட்டார்களா? இதெல்லாம் திமுகவுக்குத்தான் சாதகமாக போகிறது" என்று அரசியல் விமர்சகர்கள் அதிமுகவின் வழிகாட்டு குழு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதிமுகவுக்கென புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.. இதையடுத்து அதிமுகவின் பூசல் முடிவுக்கு வருமா என்றால், அது மேலும் விவாதத்தைதான் கிளப்பி வருகிறது.. இந்த குழு நியமனம் குறித்து நிறைய அதிருப்திகள் வெளிப்பட்டு வருகின்றன.. அவைகள் குறித்து நடுநிலைவாதிகளிடம் நாம் பேசியபோது, அவர்கள் சொன்ன கருத்துதான் இவை:

"இந்த குழுவில் 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும், 6 பேர் எடப்பாடி ஆதரவாளர்கள் என்றும் சொல்லப்படுகிறது.. முதல்ல, இதுல ஓபிஎஸ்-க்கு என்ன பலன் கிடைத்தது.. எதுக்காக அவர் பிடிவாதம் காட்டிக் கொண்டு இருந்தாரோ அது இப்போது நிறைவேறி விட்டதா தெரியவில்லை.

சின்னதா புள்ளி வைத்து விட்டுபோன பொன். ராதாகிருஷ்ணன்.. மண்டை காய்ந்து போன திராவிட கட்சிகள்.. பாஜக செம

தேர்தல்

தேர்தல்

இந்த குழு பற்றின கணிப்பு முழுமையாக நமக்கு தெரியவில்லை.. இவர்கள்தான் தேர்தல் உட்பட அனைத்து முடிவுகளிலும் ஈடுபடுவார்களா? கட்சியை இவர்கள்தான் வழிநடத்த போகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் இன்னொரு குழு தேர்தல் சமயத்தில் கொண்டு வரப்போகிறார்களா என்றும் தெரியவில்லை.. ஆனால், எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டது.. அதிமுக இனி ஒன்றிணைந்து செயல்படும் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை.. இந்த குழு அமைத்துள்ளதே சரியான சாய்ஸ்-ஆக தோன்றவில்லை.

 பொன்னையன்

பொன்னையன்

நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைவிட, மூத்த தலைவர்கள் அந்த கட்சியில் இல்லையா? தம்பிதுரை இருக்கிறாரே? செங்கோட்டையன் இருக்கிறாரே? பொன்னையன் இருக்கிறாரே? அன்வர் ராஜா இருக்கிறாரே? இவர்களை நியமிக்காதது என்ன காரணம்? இப்போதிருக்கும் குழுவின் முடிவுக்கு இந்த சீனியர்கள் எல்லாம் கட்டுப்படுவார்களா? இவர்கள் யார் எங்களை அதிகாரம் செய்ய? என்ற பேச்சு பிற்காலத்தில் எழ வாய்ப்பு இருக்கும்.

சமாதானம்

சமாதானம்

இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும், சீட் ஒதுக்கப்படும்போது, இவர்கள் டிமாண்ட் வெக்கவே செய்வார்கள். அதனால், அமைக்கப்பட்டிருக்கிற வழிகாட்டிக்குழுவும், ஒரு சமாதானமா முடிவாக தெரியவில்லை.. இன்னும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.

 சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

அதுபோலத்தான், பெண்கள், சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.. இதுவே திமுக செய்திருந்தால், வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பார்கள்.. இன்னைக்கு அம்மா, அம்மான்னு சொல்ற இவங்களுடைய பொது செயலாளராக ஜெயலலிதா தலைமை வகித்த அதிமுகவின் வழிகாட்டும் குழுவில் பெண்கள் யாருமே இல்லையே.

சிஏஏ

சிஏஏ

இந்த குழுவில் 2 கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள்.. இல்லையென்று சொல்லவில்லை.. ஆனால் முஸ்லிம் பிரதிநிதி யாருமே இல்லையே.. முஸ்லிம்கள் ஓட்டு இவங்களுக்கு வேணாமா? சிஏஏ விவகாரத்துல இன்னும் தீர்மானமே போட்டு வலியுறுத்தாத கோபம் மக்கள் மனசில் இருக்கு.. வண்ணாரப்பேட்டை சம்பவத்தின் வடு இன்னும் மாறவே இல்லை.. இதை தணிக்கவாவது, ஒரு முஸ்லிம் பிரதிநியை சேர்த்திருக்கலாமே?

 திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

அதேமாதிரி தலித் உறுப்பினரும் இல்லை.. இதுல பார்த்தீங்கன்னா, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவங்க.. தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொங்கு கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவங்க.. சி.வி. சண்முகம் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்... ஜேசிடி. பிரபாகர் கிறிஸ்துவ வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.. மனோஜ் பாண்டியன் நாடார் சமூகம்... வெறும் கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர் ஓட்டுக்களின் மட்டும் போதும் என்று முடிவு பண்ணிட்டாங்களா?

 விசிக ரவிக்குமார்

விசிக ரவிக்குமார்

யாதவ சமூகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்குகூட வாய்ப்பு தந்திருக்காங்களே.. இப்பவே விசிக ரவிக்குமார் இதை கண்டிக்க தொடங்கவிட்டார்.. "எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவின் வங்கியில் மிக முக்கியமான ஒரு சமூகமாக இருப்பது ஆதி திராவிடர் சமூகம், ஆனால், இப்போது அதிமுக அமைத்துள்ள குழுவில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம் பெறவில்லையே ஏன்? அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும்தானா நாங்கள்? வழிகாட்டுதல் குழுவில் எங்களுக்கு இடம் இல்லையா?" என்ற ஆதங்க கேள்வி எழவே செய்கிறது.

 வீக்னஸ்

வீக்னஸ்

எதுவெல்லாம் இப்போது அதிமுகவின் வீக்னஸ் ஆக உருவெடுத்து உள்ளதோ, அவ்வளவும் திமுகவுக்கு இனிமேல் பலமாக போகிறது.. அதுதான் நடக்கும்.. சிறுபான்மையினரை புறக்கணிப்பதை எக்காலத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.. இதையெல்லாம் அதிமுக சரி செய்ய ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது" என்று சொல்லி முடித்து கொண்டனர்.

 
 
 
English summary
ADMK steating commitee without muslim candidate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X