163ல் தனியா ஒரு பாயிண்ட் இருக்கே! ஆளுநர் இந்த விதியை பயன்படுத்தலாம்.. மூத்த வழக்கறிஞர் சொல்வது என்ன?
சென்னை: அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என திமுக தரப்பு கூறி வரும் நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள வழக்கறிஞர் ராமசாமி, ஆளுநருக்கு அதற்கான அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிவி விவாதம் ஒன்றில் பேசியுள்ள வழக்கறிஞர் ராமசாமி, "ஆளுநரின் செயல் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும், அதற்கான காரணம் இதுவரை எந்த ஆளுநரும் இப்படி செய்ததில்லை என்பதுதானே தவிர, அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கான வழி இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய வேண்டும்.

ஆர்டிகிள் 164 (1)ன்படி, அமைச்சர்களை நியமிப்பதில் மட்டும் தான் முதலமைச்சரின் ஆலோசனைப்படி என்று இருக்கிறதே தவிர, ஆளுநரின் விருப்புரிமைப்படி அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள் என்றே தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்டிகிள் 163(2)ன் படி ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டிய விஷயமா அல்லது இல்லையா என்ற கேள்வி எழுந்தால், ஆளுநரின் விருப்புரிமைப்படி முடிவெடுப்பதே இறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை குழுவின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும், அதேசமயம், அவர்களின் ஆலோசனை உடன் முரண்பாடு எழுந்தால் அங்கும் ஆளுநர் தனது விருப்புரிமையை பயன்படுத்தலாம் என்பதுதான் விதி.
ஆளுநர் விருப்பத்தின்படி, எந்த அமைச்சரை வேண்டுமானாலும் நீக்கிவிடலாமா என்ற கேள்வி வரும். எந்த ஆளுநரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பில் இல்லாமல், உரிய காரணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் பதவி நீக்கத்திற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
