விஜய் கிட்ட கூட வராத புஸ்ஸி, ஆதவ்! செங்கோட்டையன் வந்தவுடன் நடந்த மாற்றம்! தவெகவுக்கும் இது புதுசுதான்
சென்னை: தவெக பிரச்சாரக் கூட்டம் நேற்றைய தினம் ஈரோட்டில் நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தமிழ்நாட்டில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் இது அதிக கவனிக்கப்பட்டது. செங்கோட்டையன் வந்த பிறகு நடக்கும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. அதன்படி விஜய்யும் கரூர் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். நேற்றைய தினம் ஈரோட்டில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாற்றங்கள்
நேற்று நடந்த விஜய்யின் ஈரோடு கூட்டத்தில் பல மாற்றங்களைக் கவனிக்க முடிந்தது. ல்பீக்கர் கம்பத்தின் மீது ஏறிய இளைஞர், விஜய் நேரடியாகக் கண்டித்தார். இதற்கு முன்பு கூட்டங்களில் இதுபோல ஏறுபவர்களைக் கண்டுகொள்ள மாட்டார். ஆனால், நேற்றைய கூட்டத்தில் அந்தத் தொண்டர் இறங்கும் வரை எதுவும் பேசவில்லை. தயவு செய்து இறங்குங்கள் எனக் கண்டித்தார். இறங்கிய பிறகே பறக்கும் முத்தம் கொடுத்த தனது பேச்சைத் தொடர்ந்தார்.
மாவட்டச் செயலாளர்
கட்சி ரீதியாகவும் நேற்றைய கூட்டத்தில் இரு முக்கிய மாற்றங்கள் நடந்திருந்தது. பொதுவாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்தினால்.. அந்தப் பகுதியின் மாவட்டச் செயலாளர் அந்தக் கூட்டத்தில் மேடையில் பேசுவார். மாவட்டச் செயலாளருக்கு உள்ளூர் செல்வாக்கு இருக்கும் என்பதால் மாவட்டச் செயலாளர்களின் பேச்சும் கூட்டங்களில் கவனிக்கப்படும்.
முதல்முறை
ஆனால், விஜய்யின் கடந்த காலக் கூட்டங்களைப் பார்த்தோம் என்றால் பெரிதாக எங்கும் மாவட்டச் செயலாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்காது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மட்டுமே பேசுவார்கள். சில நேரம் அருண்ராஜ் பேசுவார்கள். பிறகு கடைசியாக வந்து விஜய் பேசுவார். அதைத் தாண்டி உள்ளூர் நிர்வாகிகளுக்குப் பேச வாய்ப்பு தரப்படாது. இருப்பினும், நேற்றைய தினம் விஜய் பேசுவதற்கு முன்பு ஈரோடு தவெக மாவட்டச் செயலாளர் பேசியிருந்தார். தவெக கூட்டத்தில் உள்ளூர் மாவட்டச் செயலாளர் பேசுவது இதுவே முதல்முறையாகும். செங்கோட்டையனின் திட்டப்படியே ஈரோடு தவெக மாவட்டச் செயலாளர் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
வரவேற்றது யார்
அதேபோல இந்த முறையை விஜய்யை செங்கோட்டையன் வரவேற்றார். அதன் பிறகு மாவட்டச் செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரது தோளைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் பேசினார். எப்போதும் விஜய் வரும்போதும் கூட புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மட்டுமே வரவேற்பார்கள். ஆனால், இந்த முறை அதுவும் மாறியிருந்தது. விஜய் வந்தபோது ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் அருகில் செல்லவில்லை. செங்கோட்டையன் மற்றும் மாவட்டச் செயலாளர் சொல்வதை மட்டும் கேட்டுவிட்டு, அங்கிருந்த கேரவனுக்குள் விஜய் சென்றுவிட்டார்.
முக்கியத்துவம்
எந்தவொரு கட்சியாக இருந்தாலும் அமைப்பு ரீதியாகக் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அது விஜய் கட்சியில் இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே செங்கோட்டையன் தான் என்கிறார்கள். அரசியல் கூட்டங்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதை விஜய் கட்சியினருக்குப் பாடம் எடுப்பது போல இந்தக் கூட்டத்தை செங்கோட்டையன் நடத்தியிருக்கிறார்..
விஜய்க்கு மாநிலம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும் கட்சி ரீதியாக அமைப்பு ரீதியாக தவெக பலவீனமாக இருப்பதாகவே சொல்லி வந்தனர். ஆனால், விஜய் கட்சியில் செங்கோட்டையன் வந்த பிறகு மாற்றம் ஏற்பட ஆரம்பித்துவிட்டதையே இது காட்டுகிறது.
-
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications