அக்னி நட்சத்திரம் நாளை ஆரம்பம் ...25 நாட்கள் வெயில் பட்டையை கிளப்பும் - தப்பிப்பது எப்படி?
அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. இம்மாதம் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது.
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல ஊர்களில் வெப்பநிலை சதமடித்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. கத்திரி வெயில் நாளை தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நீடிக்கும்.
இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, முதல் 7 நாட்களில் மெதுவாக வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த 7 தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி 7 தினங்களில் படிப்படியாக குறையும் என்பதை நாம் அனுபவித்து உணரலாம்' என்கின்றனர்.
ஜோதிடப்படி, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில், சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படும்.சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான் அக்னி நட்சத்திரம்.

அக்னி நட்சத்திர காலம்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை 'அக்னி நட்சத்திரம்' என்று கூறுகிறார்கள். இந்து பஞ்சாங்கத்தின் படி, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்
நாளைய தினம் புதன்கிழமை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட இந்த நாட்களில், சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். இந்த காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைப்பார்கள்.

அனல் காற்று வீசுதே
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியையும் தாண்டியது. இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசியதுடன், இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படுகிறது.

வெப்பம் அதிகரிக்கும்
வானிலை நிபுணர்கள் கூறும்போது, கத்திரி வெயில் நாளை தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, முதல் 7 நாட்களில் மெதுவாக வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த 7 தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி 7 தினங்களில் படிப்படியாக குறையும் என்பதை நாம் அனுபவித்து உணரலாம்' என்கின்றனர்.

கோடை காலத்தில் என்ன குடிக்கலாம்
கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு ஏற்படும். அதை தடுக்க நீர் நன்னாரி வேர் ஊற வைத்த குடிநீர் சீரகக் குடிநீர் சிறந்தது என்று சித்த மருத்துவர் டாக்டர் ஒய் ஆர் மானக்சா கூறியுள்ளனர். பானகரம் குடிப்பது வெயிலுக்கு சிறந்தது. ஒருகைப்பிடி புளி, எலுமிச்சை சாறு, வெல்லம் ,சுக்கு ஏலம், இவற்றை தேவையான தண்ணீரில் நன்றாகக் கலந்து அவ்வப்போது குடித்து வர வேண்டும் இது சிறுநீர் கடுப்பு வராமல் பாதுகாக்கும் அதி வியர்வையினால் ஏற்பட்ட களைப்பையும் நீக்கும். சுரைக்காய், தர்பூசணி, இளநீர் ,கிர்ணி பழம், வெள்ளரிக்காய், சிட்ரஸ் வகை பழங்கள், வாழைத்தண்டு, முள்ளங்கி காய், இவைகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.
Recommended Video

கோடை தலைவலி தவிர்க்க கை மருத்துவம்
கோடைகாலங்களில் தலை அதிகமாக வியர்ப்பதால் சைனஸ் வெற்றிடங்களில் நீர் கோர்த்து அதனால் தலைவலி தலைபாரம் மூக்கடைப்பு ஏற்படுகிறது. வெந்நீரில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக ஆவி பிடிக்க வேண்டும் ,அதே போன்று வெந்நீரில் நொச்சி இலை போட்டும் ஆவி பிடிக்கலாம். தலைவலிக்கு சுக்கு அல்லது கிராம்பை தண்ணீரில் ஒரசி தலைவலி உள்ள இடத்தில் பூசலாம் என்றும் டாக்டர் மானக்சா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications