நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்! முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு -எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 2வது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலைலயில் தான் விவசாயிகள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை அமலானது. அதன்படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்மூலம் கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கு பிறகு தமிழகம் 3வதாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமையை பெற்றது. இதையடுத்து 2022-2023ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாளை வேளாண் பட்ஜெட்

நாளை வேளாண் பட்ஜெட்

தமிழகத்தில் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு வேளாண் துறைக்கான பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இதுதொடர்பாக விவசாய அமைப்பினர், சங்கத்தினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறையை போலவே இந்த முறையும் விவசாய பட்ஜெட் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு

விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு

குறிப்பாக வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். பாசன வாய்க்கால்களை தூர்வாரி அதிக நிதி ஒதுக்கி அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் . வேளாண் உற்பத்தி பொருட்களை சேமிக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். நெல் கொள்முதல் மையங்களை விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றுக்கு இந்த பட்ஜெட் தீர்வளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

பயிர்கடன் தள்ளுபடிக்கு..

பயிர்கடன் தள்ளுபடிக்கு..

முன்னதாக இன்று தமிழகத்துக்கான 2022-2023ம் ஆண்டு பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தார். அப்போதும் விவசாயிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி பயிர்கடன் தள்ளுபடிக்காக ரூ.2531 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இதுவரை 14 லட்சத்து 15 ஆயிரத்து 916 விவசாயிகளுக்கு ரூ.9773 கோடி மதிப்பீட்டில் புதிய பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.7428 கோடி மதிப்பீட்டில் 10 லட்சத்து 76 ஆயிரத்து 96 குறு, சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் நாட்டில் முதல் முறையாக கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்கடன் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அணைகள் புனரமைப்பு

அணைகள் புனரமைப்பு

நடப்பாண்டில் கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ரூ.2,787 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் தடையின்றி செல்ல ரூ.3,384 கோடி மதிப்பீட்டில் காவிரி வடிநிலப்பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் போன்ற பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

 ரூ.1064 கோடி மதிப்பீடு

ரூ.1064 கோடி மதிப்பீடு

சாத்தனூர், சோயைார், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு, செயல்திறனை மேம்படுத்தவும் 2ம் அணை புரனமைப்பு, மேம்பாட்டு திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் ரூ.1064 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி

நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி

வரும் குறுவை சாகுபடிக்கு கடைமடை பகுதிகள் வரை காவிரி நீர் சென்றடைய டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ரூ.80 கோடி செலவில் 4,964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரும் சிறப்பு பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மேட்டூர் அணை திறப்புக்கு முன்பே இந்த பணிகள் துிதமாக நிறைவேற்றப்படும். இந்த வகைகளில் நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பழனிவேல் தியாகராஜன் தனது பொதுபட்ஜெட்டில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+