Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபிளைட்டை கடைசி நேரம் மிஸ் பண்ணாரே அந்த பெண்? ராகு காலத்தில் கிளம்பியதா விமானம்? ஜோதிடர் சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை வெள்ள பாதிப்பு முதல் இயற்கை சீற்றங்கள், விபத்துகள் என எது நடந்தாலும், அதற்கான ஆன்மீக காரணங்களும் சோஷியல் மீடியாவில் அலசப்படுவது வழக்கமாக உள்ளது.. அகமதாபாத் விமான விபத்து குறித்து முன்கூட்டியே கணித்திருந்ததாக 2 ஜோதிடர்களின் பேட்டிகளும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த விபத்து குறித்து ஜோதிடர் முனீஸ்வர சாஸ்திரியும் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

Wow Tamizha என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள, ஜோதிடர், வேதவிற்பன்னர் பிரம்மஸ்ரீ எல்.முனீஸ்வர சாஸ்திரி சொல்லும்போது, "படைப்பு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டதால், பாவ புண்ணியங்களை பொறுத்து, அவரவர்க்கு சுக, துக்கங்கள் சம்பவிக்கின்றன.. இதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்..

Ahmedabad Air India plane rahu kaalam

விபத்துக்கள், மரணங்கள் என்பது எல்லா காலத்திலுமே இருந்துகொண்டுதான் உள்ளது.. தற்போது மீடியாக்கள் அதிகமாக உள்ளதால், இவையெல்லாம் அதிகமாக தெரிய வருகின்றன.


மனிதனின் பேராசை

மனிதனின் பேராசையே இந்த அழிவுக்கு ஒரு காரணம்.. ஒரு ஹாலில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறதென்றால், அந்த இடத்தில் எவ்வளவு பேர் கலந்து கொள்ள முடியுமோ, அந்த அளவுதான் பங்கேற்க வேண்டும். இந்த விதிமீறலை மீறும்போது விபத்துகள், மரணங்கள் நடக்கின்றன.. மகாமகம், கும்பமேளா உட்பட இப்படித்தான் நடந்தன.

சம்பந்தப்பட்ட நிர்வாகஸ்தர்கள் மக்களை ஒழுங்குமுறைப்படுத்துகிறார்கள்.. ஆனால், அதை பொதுமக்கள் அனைவருமே அதற்கு மதித்து நடக்கிறார்களா? எப்போதும் அரசாங்கத்தையே குறை சொல்வதால் பிரயோஜனமில்லை..

தனிமனித ஒழுக்கக்கட்டுப்பாடுகளும் குறைந்துள்ளது.. இந்த தனிமனித ஒழுக்கக்கேட்டினை வளர்த்துக் கொள்ள வேண்டும்... பெரும்பாலான
அழிவுகளை மனிதர்களே தேடிக் கொள்கிறார்கள். ஜோதிடம் என்பது வழிகாட்டுதல் மட்டுமே.. ஆனால் செயல்படுத்துவது மனிதர்கள்தான்.


தனிமனித ஒழுக்கம்

ஒருவருக்கு எவ்வளவுதான் ஜாதகம் மோசமாக இருந்தாலும், அவர்களின் முறையான உணவு, சுத்தமான பழக்கவழக்கங்கள், பெரியவர்களை சார்ந்து இருப்பது போன்றவை அனைத்தும் இருந்தாலே, அவை ஜாதக விதியையே மாற்றியமைத்துவிடும்.

விமான விபத்து போன்று கும்பலாக மரணம் நேரிடுவதை ஈஸ்வர சங்கல்பமாக நினைக்க வேண்டும். இதில் யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது..

தனிமனிதனின் போராட்டம், வாழ்க்கை, வெற்றி என்பது வேறு.. இப்படி, விமானத்தில் குழுவாக கிளம்பி செல்வதையெல்லாம், இயற்கை, நியதி என்று ஒப்புக் கொண்டு, நம்மிடமிருந்து பிரிந்த அந்த ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்,..


கூடுதல் விழிப்புணர்வு

அந்த விமான நிர்வாகஸ்தர்கள், விமானத்தை இயக்குபவர்கள் இனிமேல் கூடுதல் சிரத்தையுடன், கூடுதல் விழிப்புணர்வுடன் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இதை விமர்சிப்பது நல்லதல்ல.. இந்த விபத்து குறித்து விமர்சித்தால், துக்கங்கள்தான் அதிகமாகும்.. இதை விசாரிக்கவே அரசு உள்ளது, கமிஷன் போடப்பட்டுள்ளது, விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..

நடக்கக்கூடாதது இப்போது நடந்துவிட்டது, அடுத்து என்ன என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, இறந்தவர்கள் அத்தனை பேரின் ஜாதகமும் ஒரே மாதிரியா? அத்தனை பேருக்கும் மரண திசையா? என்பதெல்லாம் நம்முடைய புத்திக்கு அப்பாற்பட்ட விஷயமாகும்.

பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள், ஒரு இடத்துக்கு பயணம் செல்லும்போது, திக் தேவதைகளை வேண்டிக் கொண்டு செல்வார்கள்.. விமானத்தில் சென்ற அத்தனை பேருமே மனநிம்மதியுடன் சென்றிருப்பார்களா?

விபத்துக்கு காரணம்

எல்லாரிடமும் பாசிட்டிவ் தன்மை இருந்திருந்தால், நல்லபடியாக பிரயாணம் செய்திருப்பார்கள்.. அனைத்தையும் மீறி ஒன்று நடக்கிறதென்றால், மனித உலகில் இவர்களின் பிரயாணம் போதும் என்று இறைவன் தீர்மானம் செய்துவிட்டார்.. ராகு காலத்தில் விமானம் விளம்பியதுதான் விபத்துக்கு காரணம் என்று ஒருவர் சொன்னார்.. அது தவறு.. 24 மணி நேரமும் நமக்கு ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள்தான்.. இறைவனுக்கு எந்த பாகுபாடும் இல்லை.. இறைவன் ஒரு கருணாமூர்த்தி..

இந்த தேதியில், இத்தனை பேர் பயணிக்கக்கூடிய விமானம் இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது.. வீமான பயணம் மேற்கொண்டவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டை ரிசர்வ் செய்தவர்கள்தான்.. அப்போது ஒவ்வொருவரும் ரிசர்வ் செய்யப்பட்ட நேரம் என்ன? இதெல்லாம் நம்மால் யூகிக்கவே முடியாது..

இயற்கை பாதிப்புகள்

இது இயற்கை.. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதை பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நிறைய விபத்துகள் நடந்துள்ளன.. அதற்கெல்லாம் கமிஷன் போட்டு என்ன ஆயிற்று? இதுவரை என்ன மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது?

பைலட்டின் ஜாதகம் சரியாக இருந்திருக்க வேண்டும்.உதாரணத்துக்கு ஒருவர் ஆபரேஷன் செய்ய போகிறார் என்றால், இந்தந்த நாட்களை தவிர்க்கலாம், இந்தந்த நாட்களில் மருத்துவம் மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லலாம்..

ஆனால், நூற்றுக்கணக்கில் குழுவாக பிரயாணம் செய்யும்போது, இது எப்படி சாத்தியம்? அப்படிப்பார்த்தால் நமக்காக தினம் தினம் ராணுவத்தில் எத்தனையோ பேர் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்களே? எனவே, இந்த விபத்துக்கு தனிமனிதனை குற்றம் சாட்டுவது அழகல்ல..

பிளைட்டை மிஸ் செய்த பெண்

ஜாதகம் என்பதற்கு மேலே ஆசீர்வாத பலன்களும் உண்டு.. இந்த விமானத்தை கடைசி நேரத்தில் ஒரு இளம்பெண் தவறவிட்டார்..

இந்த பெண், குழந்தையாக இருந்தபோது, பெரியவர்கள், மூத்தோர்கள், சான்றோர்களின் ஆசீர்வாதத்தை பெற்றிருக்கிறார்.. அந்த ஆசீர்வாத பலன்தான், விமானத்தில் ஏற விடாமல் தடுத்துள்ளது. இறைஅருள் இந்த பெண்ணுக்கு இருந்துள்ளது.. விமானத்தில் சென்றவர்களுக்கு வீரமரணம், சொர்க்க மரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+