விவசாயத்திலும் ஏஐ! வேளாண் தொழில்நுட்பங்கள் இனி விரல் நுனியில்! AI உழவரால் என்ன பயன்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி- வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில் என்ற திட்டத்திற்கு ரூ 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

2026 -2027-ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

tamil nadui ai

அப்போது
''உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து'' எனும் திருக்குறளுடன் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் உரையில் அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ செயலி மூலம் உருவாக்கப்படும். அந்த திட்டத்திற்கு ஏஐ உழவர்- வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில் என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் மழை முன்னறிவிப்பு, பாசன அட்டவணை, சந்தை விலை நிலவரம், ஆலோசனைகள் வழங்கப்படும். பயறு வகைகள் மற்ரும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் என்ற திட்டத்திற்கு ரூ 203 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அது போல் சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் என்ற பெயரில் ரூ 63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் என்ற பெயரில் ரூ 7.61 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பருத்தி உற்பத்தியை பெருக்கிட ரூ 27.21 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது போல் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ 36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப் பன்றி சேதத் தடுப்புத் திட்டம் செயல்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+