தமிழக மாநிலங்களவைத் தேர்தல்! அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! தேமுதிகவுக்கு கல்தா
சென்னை: தமிழக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரையும், மற்றொரு தனபாலும் (சபாநாயகராக இருந்தவர் அல்ல) வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தேமுதிகவுக்கு இந்த முறை மாநிலங்களவை சீட் இல்லை. இந்த அறிவிப்பை அதிமுக இணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது.

தற்போது அதிமுகவுக்கு கிடைத்த இரு மாநிலங்களவை இடங்களில் வழக்கறிஞர்களான இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி திமுக சார்பில் வில்சன், வைகோ, எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா ஆகிய 4 பேரும் அதிமுக சார்பில் அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
பதவிக்காலம்
அவர்களது பதவிக்காலம் வரும் ஜூலை 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்தான் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தம் 4 இடங்களில் திமுகவும் 2 இடங்களில் அதிமுகவும் போட்டியிட வாய்ப்புள்ளது.

மாநிலங்களவை தேர்தல்
திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், ''ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு திமுக வேட்பாளர்கள், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படுகிறது. திமுக வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள்'' என அறிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர்
இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் பெ.சண்முகம், முகமது அப்துல்லாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் திமுகவுக்கு பெரும் வெற்றியை வாங்கித் தந்ததால் வில்சனுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது போல் பெண் என்ற முறையிலும் சிறுபான்மையினர் என்ற முறையிலும் இஸ்லாமியரான சல்மாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்
மேலும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஒப்பந்தத்தின்படி கமல்ஹாசனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இரு இடங்களில் யாருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதில் விந்தியாவுக்கும் இன்பதுரைக்கும் வழங்கப்படும் என யூகங்கள் வந்த நிலையில் இன்றைய தினம் மாநிலங்களவை வேட்பாளர்களை கே.பி. முனுசாமி அறிவித்தார். அப்போது வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
தேமுதிகவுக்கு ஒரு சீட்
அதிமுகவில் இருக்கும் மாநிலங்களவை சீட்களில் ஒன்று தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என கடந்த 2024 லோக்சபா தேர்தலில் ஒப்பந்தம் போடப்பட்டதாக பிரேமலதா தெரிவித்த நிலையில் அதை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை சுதீஷ் சந்தித்தார். இதனால் தேமுதிகவுக்கு எப்படியும் ஒரு சீட் ஒதுக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் இன்றைய தினம் கே.பி.முனுசாமி கூறுகையில் அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது. அக்கட்சிக்கு வரும் 2026 ஆம்ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் வழங்கப்படும் என தெரிவித்தார்.
-
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications