சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜிகே வாசனுக்கு வாய்ப்பு.. தேமுதிகவுக்கு மறுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Rajyasabha election | மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, விஜிலா சத்தியானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, டிகே ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய வரும் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வீதம் அதிமுக, திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    திமுக எம்பிக்கள்

    திமுக எம்பிக்கள்

    தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் மார்ச் 6ம் தேதி (இன்று) முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தியூர் செல்வராஜுக்கும் என் ஆர் இளங்கோவுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார் திமுக தலைவர் தலைவர் ஸ்டாலின்.

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    இந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் 3 பேரும் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுக சார்பில் யாருக்கு வாய்ப்பு என்பது இத்தனை நாட்கள் கேள்விக்குறியாக இருந்தது. இந்த பதவிக்காக தம்பிதுரை, கேபி முனுசாமி, கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரிடையே கடும் போட்டி இருந்தது. இந்த நிலையில் தேமுதிகவும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை வழங்க வேண்டும் என அதிமுகவை கேட்டுக் கொண்டிருந்தது.

    வேட்பாளர்கள் அறிவிப்பு

    வேட்பாளர்கள் அறிவிப்பு

    இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகளை தேமுதிகவின் சுதீஷ் மாறி மாறி சந்தித்து வந்தார். எனினும் கூட்டணி ஒப்பந்தத்தில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என எங்கேயுபம் குறிப்பிடவில்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கே பி முனுசாமி, தம்பிதுரை, ஜிகே வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தம்பிதுரை ஏற்கெனவே எம்பியாகவும் மாநிலங்களவை துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளரான கே பி முனுசாமிக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.

    தமாகா

    தமாகா

    ஏற்கெனவே மத்திய அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தவர் ஜி கே வாசன். இந்த நிலையில் அண்மையில் பிரதமரை அவரது இல்லத்தில் சென்று நேரடியாக சந்தித்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் தேமுதிக தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வந்த நிலையில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தேமுதிகவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டணியில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

    English summary
    ADMK announces the candidates for Rajyasabha election for 3 seats which is going to be conducted this month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X