Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகம் காட்டும் எடப்பாடி.. அதிமுகவில் புதிய மா.செ.க்கள் நியமனம்.. அன்வர் ராஜாவுக்கு பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவுக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்த அதிமுக, வரும் லோக்சபா தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டிபோடுவது குறித்து வியூகம் வகுத்து வருகிறது. இதற்கான காய்களை தற்போதே அதிமுக நகர்த்த நகர்த்த தொடங்கி விட்டதாக அரசியல் நோக்கர்கள் முனு முனுக்க தொடங்கிவிட்டனர். தேர்தலுக்கு முன்பாக கட்சியிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை எடப்பாடிப ழனிசாமி மேற்கொள்வார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில், தற்போது புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 Aiadmk appoint new district secretaries, Anvar Raja get new post; Edappadi Palaniswami

அதன் விவரம் வருமாறு:- கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும், திரு. J. சீனிவாசன் அவர்களும், பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும், திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், Ex. M.LA., அவர்களும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், காவிரி பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.ராம. ராமநாதன், Ex. M.L.A., அவர்களும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்களாகவும்; தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்தியம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகரக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

* கன்னியாகுமரி நிழக்கு மாவட்டக் கழகம் மாவட்ட செயலாளர் திரு. N. தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., அவர்கள் (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்),
* திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் மாவட்டச் செயலாளர் திரு.J. சினிவாசன் அவர்கள், (திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர்),
* பெரம்பலூர் மாவட்டக் கழகம், மாவட்டச் செயலாளர், திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், M.A., (பெரம்பலூர் தொகுதி) Ex. M.L.A., அவர்கள்,

* தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் கும்பகோணம் மாநகரக் கழகம், மாநகரச் செயலாளர், திரு. ராம. ராமநாதன், M.Com., LLB., Ex.M.L.A., அவர்கள்,
* தஞ்சாவூர் மத்திய மாவட்டம் தஞ்சாவூர் மாநகரக் கழகம், மாநகரச் செயலாளர், திரு. S. சரவணன் அவர்கள் (மருத்துவக் கல்லூரி பகுதிக் கழக முன்னாள் செயலாளர்). கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பிலும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. I.S. இன்பதுரை, Ex. M.L.A., அவர்களும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S. அப்துல் ரஹீம் அவர்களும், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் செல்வி விந்தியா அவர்களும்,

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ராயபுரம் மனோ அவர்களும், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. R. காந்தி அவர்களும், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. E. பாலமுருகன் அவர்களும்,

வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. V. ராமு அவர்களும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், மதுக்கூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. துரை. செந்தில் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர்களாகவும்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. G. பாஸ்கரன் அவர்கள் ( முன்னாள் அமைச்சர், சிவகங்கை மாவட்டம்)

திரு. அ. அன்வர்ராஜா, Ex. M.P., அவர்கள், (முன்னாள் அமைச்சர், ராமநாதபுரம் மாவட்டம்) திரு. R. மனோகரன் அவர்கள் ( அரசு தலைமை முன்னாள் கொறடா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ) திரு. V. ராமு, B.E., அவர்கள், (மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், வேலூர் புறநகர்) திரு. ராயபுரம் மனோ, Ex. M.C., அவர்கள், (வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்) திரு. துரை, செந்தில் அவர்கள் ( மதுக்கூர் கிழக்கு ஒன்றியம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ) திரு. R. காந்தி அவர்கள், ( தஞ்சாவூர், தஞ்சாவூர் மத்திய மாவட்டம் ),

கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், திரு. I.S. இன்பதுரை, B.A., B.L., Ex. M.L.A., அவர்கள் (திருநெல்வேலி புறநகர் மாவட்டம்) கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் - திரு. S. அப்துல்ரகீம் அவர்கள் (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் தெற்கு மாவட்டம்),
கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர், செல்வி விந்தியா அவர்கள், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், (தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்),

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர், கழக வழக்கறிஞர் பிரிவு, இணைச் செயலாளர், திரு. S. அய்யாத்துரைபாண்டியன் அவர்கள் (சங்கரன்கோவில் தொகுதி, தென்காசி வடக்கு மாவட்டம் ), திரு. கி. மாணிக்கம், B.E., Ex. M.L.A., அவர்கள் (சோழவந்தான் தொகுதி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்), திரு. A.T.C. தனபால் அவர்கள் (அயோத்தியாப்பட்டினம், சேலம் புறநகர் மாவட்டம்), - திரு. E. பாலமுருகன், M.A., B.L., அவர்கள் ( வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்,

கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர், கழக மருத்துவ அணி இணைச் செயலாளர், திரு. N. மாரப்பன் அவர்கள் (தமிழ் நாடு புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவர், கரூர் மாவட்டம் ), டாக்டர் P. சரவணன், Ex. M.L.A., அவர்கள் (திருப்பரங்குன்றம் தொகுதி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் ), கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+