Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருக்க இடம் கொடுத்தா.. அதிமுகவிடம் 80 சீட் கேட்ட பாஜக! தொகுதி லிஸ்டைப் பார்த்ததும் ஷாக்கான எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தேர்தலை ஒட்டி அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் வலுவாக காலூன்ற நினைக்கும் பாஜக அதிமுகவிடம் கூடுதல் சீட்டுகளை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை வைத்து 80 தொகுதிகளுக்கு மேல் பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது. 20 தொகுதிகள் தான் என எடப்பாடி உறுதியாக இருக்கும் நிலையில் 40 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டுமென பாஜக வற்புறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை மிக சீரியஸாக எடுத்து வேலை பார்த்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அதற்குப் பிறகு நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்தித்து வருகிறது.

அதிமுக வரலாற்றில் அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் தோற்றதில்லை என்ற சாதனையை தக்க வைக்க மிகக் கடுமையாக போராடி வருகிறார். அதிமுகவில் இருக்கும் சீனியர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைவது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

AIADMK BJP TN Election

2026 தேர்தல்

கட்சியும் பல அணிகளாக சிதறுண்டு கிடக்கும் நிலையில் இறுதியாக பாஜக கூட்டணியை நம்பி இருக்கிறார் எடப்பாடி. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவும் பாமகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்தது. தேர்தல் முடிவுகள் இரு கூட்டணிக்குமே பலத்த அடியை கொடுத்தது. அதிர்ச்சி தரும் விதமாக பத்து தொகுதிகளில் அதிமுகவை பாஜக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளியது.

எடப்பாடி பழனிச்சாமி

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். மேலும் இந்த கூட்டணிக்குள் தேமுதிக பாமகவை அழைத்துவரும் வேலைகளும் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுக பாஜக கூட்டணியில் ஆரம்பத்திலேயே சலசலப்புகள் என தொடங்கி இருக்கிறது.

அதிமுக பாஜக கூட்டணி

கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 10 தொகுதிகளில் பாஜக நல்ல வாக்குகளைப் பெற்றது. சட்டசபை தொகுதிகள் என்ற அளவில் 81 தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகளை பெற்றிருந்தது. அந்த பட்டியலை தயாரித்திருக்கும் பாஜக தலைமை அதனை எடப்பாடி இடம் கொடுத்து இதில் 45 தொகுதிகளை தர வேண்டும் என கேட்டதாம் அதில் பல அதிமுக எம்எல்ஏக்கள்ம் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் போட்டியிட தயாராக இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

சீட் பங்கீடு

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக பாமக ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவும், 23 தொகுதிகளில் பாமகவும், 20 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்றது. பாஜக நான்கு, பாமக 5 தொகுதிகளில் வென்றது. இந்த நிலையில் வரும் தேர்தலில் இதேபோல அதாவது பாமகவுக்கு 25. பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது/ மேலும் தேமுதிக வந்தால் அந்தக் கட்சிக்கும் 20 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்பது தான் எடப்பாடியின் எண்ணம். ஆனால் பாஜகவின் இந்த நிபந்தனையால் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடியை சந்தித்துள்ளார். அதே நேரத்தில் 40 தொகுதிகளையாவது கேட்டு பெற வேண்டும் என பாஜகவும் பிடிவாதமாக இருக்கிறது என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+