ரப்பர் ஸ்டாம்ப் ஓபிஎஸ்.. சர்வாதிகாரி இபிஎஸ்.. கிளப்பிவிட்ட அதிமுக மாஜி எம்பி சுந்தரம்.. பரபரப்பு
சென்னை: அதிமுகவில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான் என்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி சுந்தரம் தாக்கி உள்ளார்.
பதவி கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் ஓபிஎஸ் இருப்பதாகவும், கட்சியின் சர்வாதிகாரியாக எடப்பாடி பழனிசாமி உள்ளதாகவும் முன்னாள் எம்.பி சுந்தரம் விமர்சனம் செய்துள்ளார்
2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் 2016 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்ற போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.

பெருந்துறையில் தோல்வி
இதனால் வருத்தத்தில் இருந்த அவருக்கு 2021ஆம் ஆண்டு அதிமுக தலைமை எம்எல்ஏ சீட்டும் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டார். இதனை அடுத்து அதிமுக அவரை கட்சியிலிருந்து நீக்கியது தேர்தலிலும் தோல்வியை தழுவி 4வது இடத்தையே பிடித்தார்.

தோப்பு வெங்கடாச்சலம்
இந்த நிலையில் இன்று சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி
அவருடன் அதிமுகவின் முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரமும் திமுகவில் இணைந்தார். இவர்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதேபோல் பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிளும் திமுகவில் இன்று இணைந்தனர்,.

இபிஎஸ் சர்வாதிகாரி
திமுகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜாதி கட்சி போல் அதிமுக மாறிவிட்டது. ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மாறிவிட்டார். பதவி கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் ஓபிஎஸ் செயல்படுகிறார். எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார். வேலுமணி, தங்கமணி கட்சியை ஆட்டி படைக்கின்றனர். கடமை கண்ணியம் கட்டுபாடு அதிமுகவில் இல்லை என்றார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications