கிரண்பேடியின் தண்ணீர் பேச்சு.. வளர்மதியை விட்டு விளாசித் தள்ளிய அதிமுக!
Recommended Video
சென்னை: சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து சர்ச்சை கருத்துக்கூறிய புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வளர்மதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை வறட்சியில் சிக்கி தவிப்பதற்கு மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலுமே காரணம் என்று தமிழக அரசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக சாடி நேற்று சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக மக்கள் சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் எனவும் கிரண்பேடி தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இவரது இந்த பதிவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுகதலைவர் ஸ்டாலின் கிரண்பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கிரண் பேடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதற்காக கிரண் பேடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிரண்பேடிக்கு கண்டனம்
இந்நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும் லக்கிய அணி செயலாளருமான வளர்மதி, சென்னை தண்ணீர் பற்றாக்குறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொருத்தம் இல்லாத பதிவு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தான் வகிக்கும் மதிப்பிர்குறிய பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருப்பது அதிச்சியும் வேதனையும் தரும் வகையில் அமைத்திருக்கிறது. பெண்மைக்கே உரிய உயர்ந்த தாயுள்ளமும் சிறது இன்றி மதிப்பிற்குரிய கிரண்பேடி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் பதவிக்கு அழகல்ல
புகழ் வாய்ந்த காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் தண்ணீர் பற்றாக்குறை குறித்து எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்ற இங்கீதம் கூடத்தெரியாமல் வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

காவரி நீர் தமிழக பங்கு
காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் சேர வேண்டிய உரிய பங்கினைப் பெற்றுதர பாடுபட வேண்டிய இந்த நேரத்தில், தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கண்ணியம் காக்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல அன்புரையாகக் கூறிக் கொள்கிறேன்" என வளர்மதி குறிப்பிட்டுள்ளார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications