சூரியன் பக்கம் சாயுமா ஒற்றை இலை!நீங்க மட்டும் போங்க..இபிஎஸ் போட்ட ஆர்டர்! ‘மாஜிக்கள்’ சொன்ன அட்வைஸ்
சென்னை : தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் அப்பாவு அங்கீகரித்துள்ளதால் சட்டசபை கூட்டத் தொடரை தான் மட்டும் புறக்கணிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்கலாம் என கூறியதாகவும், இதன் மூலம் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா அல்லது எதிராக செயல்படுகிறாரா என்பதனை கண்டறிய முடியும் என கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பல்வேறு விவகாரங்கள் அரசியல் சிக்கல்களுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்சபை கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
திட்டமிட்டபடி காலை 10 மணிக்கு அவை கூடிய நிலையில் கூட்டத்தில் சமீபத்தில் காலமான முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

து.தலைவர் விவகாரம்
கடந்த சில வாரங்ககளுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதோடு ஆர்பி உதயகுமாரும் எதிர்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணை தலைவராக யார் அமர்வார்கள் என்பது தான் தற்போது அதிமுகவில் பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது.

இருக்கை ஒதுக்கீடு
குறிப்பாக சபாநாயகர் அப்பாவு இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் யாருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்பது பெரிய பரபரப்பை கிளப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்சை அங்கீகரித்தார் சபாநாயகர் அப்பாவு. மேலும், எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளும் மாற்றி அமைக்கப்பட வில்லை.

கோரிக்கை நிராகரிப்பு
எதிர்கட்சி தலைவர் என்ற முறையிலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையிலும் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்தார். அதிமுகவின் உட்கட்சி அரசியலில் தலையிடாமல், சட்டரீதியாக எது சரியாக இருக்கிறதோ அந்த முடிவைத்தான் சபாநாயகர் எடுத்திருக்கிறார் என விவரம் அறிந்த மூத்த அரசியல் நிபுணர்களும், சட்ட நிபுணர்களும் கூறுகின்றனர். அதிமுக எதிர்க் கட்சி துணை தலைவராக ஓபிஎஸ்சை சபாநாயகர் அங்கீகரித்ததால், எடப்பாடி மட்டுமல்ல அவரது பின்னணியில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திமுக தலைவர் மீது கோபமாக இருக்கிறார்கள்.

மொத்தமாய் புறக்கணிப்பு?
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தை புறக்கணித்தது போல எஞ்சி இருக்கும் 2 நாள் கூட்டத்தையும் புறக்கணித்து விடலாம் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி மொத்தமாக புறக்கணிப்பதை விட நான் மட்டும் புறக்கணிக்கிறேன். எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் கலந்து கொள்ளட்டுமே என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் சீனியர்கள், இரண்டு நாள் கூட்டத்தையும் ஒட்டுமொத்தமாக நாம் புறக்கணித்தால் தான், திமுக அரசை ஓபிஎஸ் எப்படி கையாளுகிறார் என தெரியும். திமுக அரசுக்கு ஜால்றா தட்டுகிறாரா? எதிர்க்கிறாரா? என்று தெரிந்து கொள்ளலாம் என கூறியிருக்கிறனர்.

ஓ.பன்னீர்செல்வம்
அதனால் எல்லோரும் புறக்கணிக்கலாம் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். என்ன முடிவு என்பது இன்று இரவு தெரியும் என்கிறார்கள் அதிமுக எம்.எல்.எக்கள். அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடர்களின் போது ஓ.பன்னீர்செல்வம் திமுகவை அதிகமாக சாடாமல், ஆனாலும் சொல்ல வந்ததை சோல்லியிருக்கிறார். இதனால் இந்த கூட்டத் தொடரிலும் ஓபிஎஸ்ஸின் போக்கு சாப்ட் கார்னராகவே இருக்கும் என்கின்றனர் தேனி தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி & கோ மொத்தமாய் கூட்டத்தொடரை புறக்கணிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications