அண்ணன் வாழப்பாடியார் வாழ்க! ஆர்ப்பாட்டத்தில் துதியை மாற்றி பாடிய முன்னாள் எம்எல்ஏ! கடுப்பான எடப்பாடி
சென்னை : சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அண்ணன் எடப்பாடியார் வாழ்க! என்பதற்கு பதிலாக அண்ணன் வாழப்பாடியார் வாழ்க! என முன்னாள் எம்எல்ஏ ஒருவர் முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
மேலும் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக ஆர்ப்பாட்டம்
முதல் கட்டமாக சென்னை, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் உள்ள மாவட்டங்களை தவிர சுமார் 50 அதிமுக அமைப்பு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்டமாக நேற்று கன்னியாகுமரி தஞ்சாவூர் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3ஆம் கட்ட ஆர்ப்பாட்டம்
இன்று சென்னையில் உள்ள மொத்தம் பத்து அமைப்பு மாவட்டங்களையும் சேர்த்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட கழகங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமே அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்களான தங்கமணி திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாழப்பாடியார் வாழ்க
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலைக்கு வந்து பின்னர் மேடை ஏறினார் அப்போது அவரை வரவேற்று உற்சாகமாக தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது மேடையில் நின்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஒருவர் அண்ணன் எடப்பாடியார் வாழ்க என அழைப்பதற்கு பதிலாக உணர்ச்சிவசப்பட்டு அண்ணன் வாழப்பாடியார் வாழ்க அண்ணன் வாழப்பாடியார் வாழ்க என இரண்டு முறை ஆவேசமாக முழங்கினார்.

சலசலப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி மூத்த நிர்வாகிகளை முறைத்த நிலையில் சக நிர்வாகிகள் அந்த எம்எல்ஏ வை கண்டித்தனர். இதையடுத்து அவர் அண்ணன் எடப்பாடி வாழ்க என கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்த நிலையில் திடீரென லேசாக மயக்கம் அடைந்தார் இதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் தண்ணீரை கொடுத்து அவரை அமர வைத்தனர்.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications