அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் கூடும் அதிமுக செயற்குழு கூட்டம் - புதிய அவைத்தலைவர் யார்?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய விவாதம் நடைபெற உள்ளதாகவும், புதிய அவைத்தலைவர் தேர்வும் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
அதிமுகவிலிருந்து கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ள சூழலில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான தீர்மானமும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவிலிருந்து உறுப்பினர் சோழவந்தான் மாணிக்கம், பாஜகவில் சேர்ந்த நிலையில், அவருக்கு பதிலாக மாற்று உறுப்பினரை சேர்ப்பது அல்லது வழிகாட்டுதல் குழுவை விரிவு படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக்கூறியதாகவும், அதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
சசிகலா இணைப்பு பற்றி தொலைக்காட்சிகளில் தொடர்ந்து கூறி வந்த அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா நள்ளிரவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் சசிகலா தொடர்பாக யாரும் பேசக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய அவைத்தலைவர், உட்கட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில் அந்த பதவி காலியாக உள்ளது. எம்.ஜி.ஆர். காலம் முதல் கட்சியின் மூத்த நிர்வாகிகள்தான் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் மூத்த நிர்வாகி ஒருவரை புதிய அவைத்தலைவராக நியமிக்க ஆலோசித்து வருகிறார்கள். இன்றைய தினம் புதிய அவைத்தலைவர் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications