சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்க உங்களது..கிழக்க எங்களது! வந்ததே 3 பேரு..மாவட்டத்தை பிரித்து கொடுத்த ஓபிஎஸ்! கடுப்பான ர.ர.க்கள்

Google Oneindia Tamil News

சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தனது அணிக்கு வந்த 3 பேருக்கு பதவி கொடுக்க வேண்டுமென்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல மாவட்டங்களை 3 ஆக பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இருப்பது போதாதென்று இது வேறயா என அதிமுக தொண்டர்கள் புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

அதே நேரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் கட்சி தற்போது எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதோடு அவர் விடுத்த அறிவிப்புகளும் செல்லத்தக்கதாகி விட்டது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்..தமிழகத்தில் நவ.6 ல் நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி..மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆர்எஸ்எஸ் ஊர்வலம்..தமிழகத்தில் நவ.6 ல் நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி..மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது. அதே நேரத்தில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமனம், அரசியல் ஆலோசகர் நியமனம் என அதிரடி காட்டி வருகிறது.

புதிய மா.செ.க்கள்

புதிய மா.செ.க்கள்

அந்த வகையில் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உளிட்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்து வருகின்றனர். தென் மாவட்டமான திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு, திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் தெற்கு என மூன்று மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும், அதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக 3 பேர் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்

அதன்படி," S.B.பசும்பொன், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (பழனி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகள்) ப. சுப்பிரமணியன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிகள்) வைகை பாலன், திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (நிலக்கோட்டை, நத்தம் சட்டமன்றத் தொகுதிகள்) நியமிக்கப்பட்டனர். இதனை தான் சமூக வலைதலங்களில் எடப்பாடி தரப்பு அதிமுக தொண்டர்கள் கலாய்த்து வருகின்றனர். 'ஏற்கனவே கட்சி இரண்டாக கிடக்கு' ஓபிஎஸ் மூணாக பிரிச்சுட்டாரே என கூறி வருகின்றனர்.

புலம்பல்

புலம்பல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியில் முக்கிய முகங்களாக வேடசந்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பசும்பொன் ஆகியோர் ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தான் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் அதிமுக விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், எதற்காக இந்த தேவையில்லாத வேலை என அதிமுகவினரே சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

English summary
AIADMK executives are lamenting that O. Panneerselvam's districts have been divided into 3 and district secretaries have been appointed to give positions to 3 people who joined his team from Edappadi Palaniswami's side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X