சோதனை மேல் சோதனை.. ஆள விடுங்க சாமி! எகிறிக் குதித்து ஓடும் ர.ர.க்கள்..எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!
சென்னை: தமிழகம் மற்றொரு தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக - தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த 2 தொகுதிகளில் ஏற்கனவே வென்ற அதிமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட பணம் இல்லையென பலரும் ஜகா வாங்குவதால் எடப்பாடு பழனிசாமி அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழக அரசு முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று 120 நாட்கள் கடந்து இருக்கிறது. ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மிக முக்கியமாக குதிரை பேர குற்றச்சாட்டு விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியது.

சட்டசபை தேர்தல் முடிவடைந்த உடன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவளித்தன. இதனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.
அதிமுக
தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்20க்கும் மேற்பட்டோர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
எம்எல்ஏக்கள் ராஜினாமா
முன்னதாக திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தனர்.
இடைத் தேர்தல்
இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படையில் தற்போது தாராபுரம் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேட்பு மனு தாக்கல்
தேர்தல் வழக்குகள் காரணமாக மற்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தற்போது 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடக்கிறது முன்னதாக இந்த மாதத்திலேயே வேட்பு மனு தாக்கல் வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுவை வாபஸ் பெறுவது, இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகியவை இம்மாதத்திலேயே வெளியிடப்பட இருக்கிறது.
திமுக வேட்பாளர்கள்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் விருப்பமனு நடவடிக்கைகள் இல்லாமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து களத்தில் இறக்கி இருக்கிறார். மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக வேட்பாளர்கள்
ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல், சத்யபாமாவும் தங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை களத்தில் இறக்கி கிட்டத்தட்ட பிரச்சாரத்தையே தூங்கிவிட்டனர். ஆனால் தமிழகத்தை ஆண்ட கட்சியான அதிமுக என்னும் அமைதியாகவே இருக்கிறது.
வெற்றி வாய்ப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கப்பட்டு வரும் நிலையில் யாரும் ஆர்வத்தோடு விருப்ப மனு அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஏற்கனவே தேர்தலில் செலவு செய்து தோற்ற எம்எல்ஏக்கள் விஜய் அலையில் காணாமல் போயினர். தற்போது ஆளும் கட்சியாக இருப்பதோடு கூட்டணி கட்சி ஆதரவும் இருப்பதால் விஜய்க்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் திமுக எப்படியாவது வென்று தங்கள் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டுமென வரிந்து கட்டி கொண்டு காத்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி
இப்படி இரு பெரும் கட்சிகளுக்கு இடையே தாங்கள் போட்டியிட்டால் வெல்ல முடியுமா என்ற சந்தேகத்தில் அதிமுகவினர் போட்டியிட விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இருந்த போதும் தேர்தலில் போட்டியிடாவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு ஆதாரம் நெருக்கமான சில முக்கிய புள்ளிகளை தேர்தலில் களத்தில் இறங்குங்கள், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசி வருகிறார். ஆனால் ஏற்கனவே தேர்தலில் தோற்றது பத்தாதா? இடைத்தேர்தலிலும் தோற்க வேண்டுமா என பலரும் பின்வாங்குவதாக சொல்வதால் எடப்பாடி அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
