எல்லாம் மாயை.. அதிமுக ஜம்முன்னு இருக்கு..தொண்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆர்.பி. உதயகுமார்
சென்னை: உண்மையில் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்றும், அப்படியொரு தோற்றம் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் முதுகுளத்தூரில் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோஷம் அவ்வப்போது எழுந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியது.
இதில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை தாண்டி புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்தது.

அதிமுக பொதுக்குழு
இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு தனது ஒப்புதல் பெறாமல் நடந்தது எனவும் ஒருங்கிணைப்பாளரான எனது ஒப்புதல் இன்றி நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார்.

உதயகுமார் பேட்டி
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 அம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என்று தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக அதிமுக பிரிந்து வருவதும், இதனால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், உண்மையில் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்றும், அப்படியொரு தோற்றம் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகால அதிமுக வரலாறு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கீழத்தூவல் கிராமத்தில் உறவினர் இல்ல விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''அதிமுக ஒரு பின்னடைவை சந்தித்திருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு பின்னடைவும் அதிமுகவிற்கு ஏற்படவில்லை. கட்சியில் யாராக இருந்தாலும் தலைமைக்கு ஒத்துழைப்பு தராதவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுவதுதான் 50 ஆண்டுகால அதிமுக வரலாறு.

அவசியம் இல்லை
அந்த வகையில் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, பரிசீலனை செய்து கட்சியினுடைய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த காரணத்தால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளே தவிர வேறு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. இன்று நடைபெறுகிற சட்டப் போராட்டம் என்பது நியாயங்களையும், தர்மங்களையும் எடுத்துரைப்பதற்கு ஒரு வாய்ப்பாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என தெரிவித்தார்.
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்!












Click it and Unblock the Notifications