Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரம்பரையே அதிமுக தான்! அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஜிபி முத்துவை கொண்டாடித் தீர்க்கும் ஐடி விங்

Subscribe to Oneindia Tamil

சென்னை : டிக் டாக் மூலம் புகழ்பெற்று தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கும் ஜிபி முத்து தனது குடும்பமே அதிமுகவுக்கு ஆதரவானது எனவும், தனக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும் என பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் ஜிபி முத்து அதிமுகவை சேர்ந்தவர் என விடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

டிக் டாக் செயலி மூலம் உருவான பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி பி முத்து. உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான அவர் அது தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

தனது யூட்யூப் பக்கத்தில் தனக்கு வரும் கடிதங்களை படித்துக் காட்டிய வீடியோக்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்ஸ்டாகிராமிலும் கடை விரித்து இருக்கிறார் ஜி பி முத்து. தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர் மக்களிடையே மிகவும் பிரபலம் அடையத் தொடங்கினார்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

இதை அடுத்து கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாகவே மாறினார். நாளுக்கு நாள் அவரது ரசிகர் பட்டாளமும் அதிகரித்து வந்தது. மீம் கிரியேட்டர்களும் ஆதரவு கொடுக்க தமிழகம் முழுவதும் பிரபலமானார் ஜி பி முத்து. இதை அடுத்து ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .அவரது பிரபலத்தை வைத்து மற்றும் ஒரு அதிர்ஷ்டமும் அடித்தது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜி பி முத்து.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

தனது அப்பாவித்தனமான முக பாவனைகள், எதுவுமே தெரியாதது போல் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் பலரையும் ரசிக்க வைத்தது. தொடர்ந்து ஆதாமா? அப்படின்னா யாரு என கேட்டு நடிகர் கமலஹாசனையே ஒரு நிமிடம் மலைக்க வைத்து விட்டார். சிறிது நாட்களில் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வீட்டிலிருந்து வெளியேறினார். இதனால் அவருக்கு ரசிகர் பட்டாளம் மேலும் அதிகரித்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த கையோடு சன்னி லியோனோடு நடித்ததாக கூறி பரபரப்பை பற்ற வைத்தார்.

அதிமுக ஆதரவு

அதிமுக ஆதரவு

தற்போது அவர் பல சேனல்களில் கலந்து கொண்டு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த ஜிபி முத்து அரசியல் குறித்த தனது பார்வையை பகிர்ந்து கொண்டார். அதில் தனது தந்தை மற்றும் அவரது தந்தை என அனைவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள். அந்த வழியில் வந்த எனது தாயும் அதிமுகவை சேர்ந்தவர் தான். எனக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். ஒரு இரும்பு பெண்மணியான அவர் எப்போதும் யாருக்கும் பயந்ததில்லை. அதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவர் மரணம் அடைந்தபோது ஒரு நாள் முழுவதும் நான் அழுதேன்: எனக்கூறி இருந்தார்.

அதிமுக ஐடி விங்

அதிமுக ஐடி விங்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த வீடியோவை அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பலரும் தனித்தனியாக யூட்யூப் மற்றும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் எங்கள் பரம்பரையே அதிமுக தான் என அண்ணன் ஜி பி முத்து பேசினார் என வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும் எம்ஜிஆர் சிலைக்கு அருகே ஜி பி முத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிமுகவுக்கு ஜிபி முத்து ஆதரவு அளித்திருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் அந்த வீடியோவில் எனது அப்பா அம்மா அதிமுகவை சேர்ந்தவர்கள். எனக்கு ஜெயலலிதாவை மட்டும் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும் எனக்கு அரசியல் ஒத்து வராது என மற்றொரு சேனலுக்கும் அவர் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+